100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்க இருக்கும் விராட் கோலியின் பிரத்தியேகப் பேட்டி – வீடியோ இணைப்பு

0
136
Virat Kohli about his 100th Test Match

இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில் நாளை முதல் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கின்றது. நாளை நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற இருக்கின்றது.

இந்த டெஸ்ட் போட்டி முன்னாள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டியாகும். இந்திய அணியை கடந்த ஐந்து வருடங்களில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்திற்கு கொண்டு சென்ற பெருமை விராட் கோலிக்கு உண்டு. அவரது தலைமையில் இந்திய அணி பல்வேறு வெற்றிகளை குறிப்பாக வெளிநாடுகளில் வரலாற்று மிக்க வெற்றிகளை அடைந்து இருக்கிறது. அவருடைய 100வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற இருப்பதால் பிசிசிஐ 50% பார்வையாளர்களை நாளை அனுமதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோஹித் ஷர்மா முதல் முறையாக இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்குகிறார். அவரது தலைமையின் கீழ் விராட் கோலி தன்னுடைய 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதால், இந்திய ரசிகர்கள் அனைவரும் நாளை நடைபெற இருக்கின்ற போட்டியை எதிர்நோக்கி ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது எனக்கும் என் குடும்பத்திற்கும் எனது பயிற்சியாளருக்கும் பெருமையான தருணம்

100வது டெஸ்ட் போட்டியை விளையாட தயாராக இருக்கும் விராட் கோலியிடம் பிசிசிஐ சார்பில் ஒரு பிரத்தியேக பேட்டி எடுக்கப்பட்டது. அந்தப் பேட்டியில் அவர் “100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது. நம்பிக்கை வீண் போகாத வண்ணம் நாளை 100வது டெஸ்ட் போட்டியில் நான் களமிறங்க இருக்கிறேன் கடவுளுக்கு நன்றி என்று கூறினார். மேலும் இந்த 100 டெஸ்ட் போட்டிகளுக்கு இடையில் நிறைய சர்வதேச போட்டிகளில் நான் விளையாடியிருக்கிறேன்.

என்னால் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடிந்தது என்று சொன்னால் அது என்னுடைய ஃபிட்னஸ் மூலமாக தான். நான் என்னுடைய பிட்னஸ் விஷயத்தில் இன்றும் கட்டுக்கோப்பாக இருக்கிறேன். தொடர்ந்து அதே வேகத்துடன் விளையாட என்னுடைய பிட்னஸ் எனக்கு உதவியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

100வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பது எனக்கு மட்டுமல்ல என்னுடைய குடும்பத்திற்கும் குறிப்பாக என்னுடைய பயிற்சியாளராகும் பெருமையான தருணமாக நான் நினைக்கிறேன் என்று விராட் கோலி மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடைசி வரை இருக்க வேண்டும்

பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பாக நான் ஜூனியர் லெவல் கிரிக்கெட் போட்டிகளில் நிறைய (7 முதல் 8 இரட்டை சதங்கள் ) இரட்டை சதங்கள் விளாசி இருக்கிறேன். இந்த குறிப்பிட்ட கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் முடிந்தவரை அதிக ரன்கள் குவிக்க வேண்டும். அந்த விஷயத்தில் எப்பொழுதும் நான் கவனமாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ஒரு பேட்ஸ்மேன் குறிப்பாக முதல் இன்னிங்சில் தனது அணிக்கு முடிந்தவரையில் நிறைய ரன்கள் குவிக்க வேண்டும். அப்படி குறைப்பதன் மூலமாக அணியின் வெற்றி முடிந்த வரை அதிகரிக்கும். இனிவரும் நாட்களிலும் இதே விஷயத்தை நான் பின்பற்றுவேன் என்றும் கூறியுள்ளார்.

இறுதியாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எப்பொழுதும் இதேபோல நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் மற்ற கிரிக்கெட் பார்மெட்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இது தான் உண்மையான கிரிக்கெட். இந்த கிரிக்கெட் பார்மெட்டை மக்கள் கடைசிவரை அனுபவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.