இந்திய கிரிக்கெட்டில் கடந்த சில நாட்களாகவே மிகவும் பேசப்படும் விஷயம் விராட் மற்றும் பிசிசிஐ இருவருக்கும் இடையில் நடந்தேறிக் கொண்டிருக்கும் சில பிரச்சனைகள் தான். T20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பு விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததே பிசிசிஐயின் அழுத்தத்தினால் தான் என்று பலரும் கருத்துக்களை கூறி வந்தனர். ஆனால் பிசிசிஐ இதை முற்றிலுமாக மறுத்து வந்தது. விராட் கோலி பதவி விலகும் போது அப்படிச் செய்ய வேண்டாம் என்று பிசிசிஐ கூறியதாக கங்குலி கூறினார். தற்போது ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி நீக்கப்பட்டு புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்பு ஒருநாள் தொடரில் விளையாட கோலி மறுப்பு தெரிவித்து வருவதாக செய்திகள் வலம் வந்தன. தற்போது அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக விராட் கோலி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்புதான் தனக்குத்தான் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விஷயத்தை அறிவித்தார்கள் என்று கூறியுள்ளார் கோலி. மேலும் t20 கேப்டன்சி இல் இருந்து விலகும் போது பிசிசிஐ தரப்பில் இருந்து விலக வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கங்குலி கூறினார். ஆனால் அப்படி எந்த தகவலும் தனக்கு வரவில்லை என்று கோலி மறுப்பு தெரிவித்துள்ளார். ரோஹித்துக்கு இவருக்கும் பல நாட்களாக ஒத்துப் போகவில்லை என்று செய்திகள் வந்துகொண்டே இருக்கும் போது அப்படியெல்லாம் எதுவுமில்லை என்றும் இதை கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் நான் கூறி வருவதாக விராட் கூறியுள்ளார்.
💬 💬 @ImRo45 and Rahul Dravid have my absolute support: @imVkohli #TeamIndia #SAvIND pic.twitter.com/jXUwZ5W1Dz
— BCCI (@BCCI) December 15, 2021
மேலும் ரோகித் சர்மா மிகச் சிறந்த கேப்டன் என்றும் அதை பலமுறை இந்திய அணியையும் ஐபிஎல் தொடரிலும் வழிநடத்தி நிரூபித்துள்ளார் என்றும் கோலி கூறினார். ஒரு வீரராக கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கு என்னுடைய ஆதரவு நிச்சயம் உண்டு என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஒருநாள் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து தான் உருவாக்கப்பட்டது குறித்து பேசும்போது இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே ஐசிசி தொடர்களில் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை என்றும் அதன் காரணமாக தான் ஏற்பட்டதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்பு எந்த வருத்தமும் இல்லாமல் பழைய விராட் கோலியாக மாறி ரன் அடிக்கும் மெஷினாக தென் ஆப்பிரிக்க தொடரை தொடங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.