ஸ்ட்ரைக்கர் ஸ்டெம்பில் பட்டு திசை மாறி மற்றொரு ஸ்டெம்பில் அடித்த பந்து ; வித்தியாசமாக ரன் அவுட் ஆன ஆண்ட்ரே ரஸல் – வீடியோ இணைப்பு

0
2394
Andre Russell Run Out BPL

2022ஆம் ஆண்டிற்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் இன்று தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் சட்டோகிரம் சேலஞ்சர்ஸ் மற்றும் பார்ச்சூன் பரிஷால் அணிகள் மோதின. போட்டியின் முடிவில் பார்ச்சூன் பரிஷால் மணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பின்னர் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் மினிஸ்டர் குரூப் தாக்கா மற்றும் குல்னா டைகர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் முடிவில் குல்னா டைகர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

வினோதமான வகையில் ஆட்டமிழந்த ரஸ்ஸெல்

போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய மினிஸ்டர் குரூப் தாக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 50 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்த அணியில் அதிரடி ஆட்டக்காரரான ரஸ்ஸெல் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 14.2 ஓவர் முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் அன்ட்ரூ ரஸ்செல் களம் இறங்கினார்.
அந்த ஓவரின் முதல் மூன்றாவது மற்றும் ஐந்தாவது பந்தை எதிர்கொண்டு 1 சிக்ஸர் மற்றுமொரு சிங்கிள் என ஆறு ரன்கள் குவித்து மிக அதிரடியாக தனது ரன் வேட்டையை ரஸ்செல் துவங்கினார்.

அந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து மீண்டும் ஸ்டிரைக்கை தக்க வைத்துக் கொள்ள ரஸ்செல் திட்டமிட்டார். அதன்படி பந்தை அடித்து அவர் ரன் ஓட, அவருடன் இணைந்து விளையாடிய சக வீரர் மகமதுல்லா வேகமாக கிரீஸ்ஸை நோக்கி ஓடிவந்தார்.

- Advertisement -

இதற்கு இடையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த டன்சித் ஹசன் வேகமாக பந்தை ஸ்டம்புக்கு எறிந்தார். அவர் வீசிய வேகத்திற்கு பந்து ஸ்டம்பில் அடித்தது. ஆனால் அந்த பந்து அங்கே நிற்காமல் அன்ட்ரூ ரஸ்ஸெல் ஓடிக்கொண்டிருந்த நான் ஸ்ட்ரைக் ஸ்டும்ப்பை நோக்கி சென்று இறுதியில் அந்த ஸ்டம்பிலும் அடித்தது.

வீடியோவை மறுஆய்வு செய்து பார்க்கையில் முதலில் ஸ்ட்ரைக் ஸ்டும்பில் ( மகமதுல்லா ஓடி வந்த ) பந்து பட்ட பொழுது, மகமதுல்லா தன்னுடைய பேட்டை கிரீஸிற்குகுள் வைத்திருந்தார். ஆனால் அந்த பந்து மறுபக்கம் ரஸ்செல் ஓடிய நான் ஸ்ட்ரைக் ஸ்டும்ப்பில் பட்ட பொழுது ரஸ்செல் கிரீஸ்ற்கு வெளியே இருந்த காரணத்தினால் துரதிஷ்டவசமாக அவர் ரன் அவுட் ஆனார்.

ஸ்ட்ரைக் ஸ்டம்பில் பட்டவுடன் எப்படியும் பந்து இந்த ஸ்டம்பில் பட்டு விடாது என சற்று கேஷுவலாக அவர் ஓடியது கடைசியில் அவருக்கு பாதகமாக அமைந்தது. மிகவும் வினோதமான வகையில் துரதிஷ்டவசமாக ரஸ்செல் அவுட்டான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.