லார்ட் என்கிற பட்டம் தனக்கு எப்படி எப்பொழுது வந்தது என்பது குறித்து விளக்கிக் கூறிய ஷர்துல் தாக்கூர் – வீடியோ இணைப்பு

0
427
Shardul Thakur about his Surname Lord

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு செல்ல பெயர் அல்லது புனைப்பெயரை ரசிகர்கள் ஒரு கட்டத்தில் வைத்து விடுவார்கள். அதன்படி தற்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டர் வீரரான தாகூருக்கு லார்ட் என்கிற பட்டத்தை இந்திய ரசிகர்கள் கொடுத்துள்ளனர். சமூக வலைதளங்கள் மற்றும் மைதானத்தில் கூட அவரை அனைத்து ரசிகர்களும் அவரை லார்ட் லார்ட் என்றே அழைத்து வருகின்றார்கள்.

கடந்த ஆண்டு முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தாகூர்

ஷர்துல் தாகூர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் ஒரு அரை சதத்தையும் குவித்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அவரது பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அதன் பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி 2 அரை சதங்கள் பேட்டிங் மூலமாக குவித்தார். பின்னர் பந்துவீச்சில் மொத்தமாக 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். அதனை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு அரை சதம் மற்றும் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக விளையாடி கொண்டிருக்கிறார்.

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமல்லாமல் இந்திய அணிக்காக டி20 போட்டிகளிலும் மிக சிறப்பாக விளையாடி முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றி உதவி இருக்கிறார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியிலும் மிக சிறப்பாகவே இவர் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

லார்ட் என்கிற பட்டம் எனக்கு வந்தது அப்போதுதான்

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை முடித்த பின்னர் இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் நான் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடினேன். இங்கிலாந்து தொடர் ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னரும், ஐபிஎல் தொடர் நடைபெறுவதற்கு முன்னர் நடந்தது. இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அதுமட்டுமின்றி பேட்டிங்கில் இரண்டு அரை சதம் விளாசினேன். அந்த நேரத்தில்தான் என்னை அனைவரும் லார்ட் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

- Advertisement -

நாட்கள் செல்லச் செல்ல ஒவ்வொருவராக லார்ட் என்று என்னை அழைக்க, பின்னர் அனைத்து இந்திய ரசிகர்களும் என்னை இவ்வாறு அழைக்க தொடங்கிவிட்டார்கள். நாட்கள் செல்லச் செல்ல இந்தப் பெயர் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. பின்னர் அனைத்து இந்திய ரசிகர்களும் தன்னை லார்ட் என்றே அழைக்கத் தொடங்கி விட்டதாக தாகூர் கூறியுள்ளார்.