அதிர்ஷ்டமில்லாத விராட் கோலி ! விக்கெட் கீப்பர் தவற விட்ட கேட்ச்சை ஒற்றைக் கையில் பிடித்த ஜோ ரூட் – வீடியோ இணைப்பு

0
145
Virat Kohli dismissal

ரோகித் சர்மா தலைமையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, அவர் கோவிட்டால் பாதிக்கப்பட, ஜஸ்ப்ரீட் பும்ரா தலைமையில் இங்கிலாந்து அணியுடன் பர்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸை வெல்ல, இந்திய அணி முதலில் பேட் செய்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் சீக்கிரத்தில் ஆட்டமிழக்க, ரிஷாப் பண்ட் மற்றும் ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டுவந்ததோடு, இருவரும் சதமடித்து அணி 416 என்ற ரன்களுக்கு போக உதவி செய்தனர்.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் எல்லா பேட்ஸ்மேன்களும் விரைவில் வெளியேறினாலும், ஜானி பேர்ஸ்டோ மட்டும் நிலைத்து நின்று அதிரடியாய் விளையாடி சதமடித்து இங்கிலாந்து அணியை 284 என்ற கெளரவமான ஸ்கோரை எட்ட வைத்தார்.

இதன்படி 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவங்க, ஆன்டர்சனின் முதல் ஓவரிலேயே சுப்மன் கில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஹனுமா விகாரியும் அதேபோல் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் வெளியேறினார்.

இதற்கடுத்து விராட் கோலி களத்திற்கு வந்து புஜாராவுடன் சேர்ந்து, ஆரம்பத்திலேயே பிரமாதமான கவர் டிரைவ்களையும், ஆன்டர்சனின் ஓவரில் அருமையான ஸ்ட்ரெயிட் டிரைவையும் அடித்து அமர்க்களப்படுத்தினார். இந்த முறை 71வது சதம் உறுதிதான் என்று நினைத்திருந்த வேளையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் குட்லென்த்தில் வீசிய பந்து அதிகப்படியாய் எகிறி, விராட்கோலியின் பேட்டில் பட்டு கீப்பரிடம் சென்றது. விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் அந்தப் பந்தை பிடிக்க முயல, பந்து அவரது கையுறையில் பட்டு நழுவியது, விராட் கோலி தப்பித்தார் என்று நினைத்த நேரத்தில், நழுவிய பந்து முதல் ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட்டின் கைகளில் அழகாய் விழ, அதைச் சுலபமாய் பிடித்தார் ஜோ ரூட். இறுதியாக 40 பந்துகளில் நான்கு பவுண்டரிகளோடு 20 ரன்களில் விராட் கோலி பரிதாபமாய் வெளியேறினார்!

- Advertisement -