தரையில் பட்ட பந்தை கேட்ச் பிடித்தது போல் நடித்து ரசிகர்களை ஏமாற்றிய ரோஹித் ஷர்மா – வீடியோ இணைப்பு

0
944
Rohit Sharma Catch

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றன. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடியுள்ள லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்துள்ளது. லக்னோ அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேஎல் ராகுல் 60 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 103* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் விளையாடிக் கொண்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 6 ரன்கள் எடுத்த நிலையில், ஆவேஷ் கான் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். டிவால்ட் பிரெவிஸ் 12 பந்துகளில் 33 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி கொண்டிருந்த பொழுது ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -
ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரோஹித் ஷர்மா

லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஏழாவது ஓவரை முருகன் அஸ்வின் வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை அவர் மணிஷ் பாண்டேவிற்கு எதிராக வீசினார். அந்த பந்தை ஆஃப் சைடு பக்கமாக மணிஷ் பாண்டே அடித்தார்.

தரையில் பட்டு பின்னர் ரோஹித் ஷர்மாவின் கைகளுக்கு அந்த பந்து சென்றது. பந்தை பிடித்த உடனே ரோஹித் ஷர்மா கேட்ச் பிடித்து விட்டது போல உற்சாகமாக கொண்டாடினார். ஒரு நொடியில் சில ரசிகர்கள் அனைவரும் அது கேட்ச் என்றே நம்பி விட்டனர். பின்னர் தான் தெரிய வந்தது அது தரையில் பட்டு பின்னர் ரோஹித் ஷர்மா கைகளுக்கு சென்றதென்று.

ரோஹித் ஷர்மா அவுட் என்பது போல சற்று நகைச்சுவையாக கொண்டாடி ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினார். அவ்வாறு கேட்ச் பிடித்த பின்னர் ரோஹித் ஷர்மா கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

6 ஓவர் முடிவில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடிக் கொண்டிருக்கின்றது. களத்தில் தற்பொழுது இஷன் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.