அடேங்கப்பா ! கடினமான 2 கேட்ச்களை காற்றில் பறந்து பிடித்த பண்ட் ; இங்கிலாந்து டாப் ஆர்டரை சுருட்டிய இந்திய பவுலர்கள் – வீடியோ இணைப்பு

0
108
Rishabh Pant stunning catches

இந்திய அணி இங்கிலாந்தோடு சிவப்புப் பந்து போட்டியில் தோற்றாலும், டி20 வெள்ளைப்பந்து போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை 2-1 என வென்றது. தோற்ற மூன்றாவது டி20 போட்டியிலும் மிகச்சிறப்பாய் போராடியே தோற்றது. சூர்யகுமார் யாதவ் அதிரடியான சதத்தை அடித்து பிரமாதப்படுத்தினார்!

இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இங்கிலாந்து அணியோடு இந்திய அணி விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்றும், அடுத்தடுத்த இரண்டு போட்டிகள் ஜூலை 14, 17ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

- Advertisement -

இலண்டன் நகரத்தின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டிக்கான டாஸில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் இடுப்பு வலியால் விராட் கோலி இடம்பெறவில்லை. இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் ஆகியோர் திரும்புவதால், இந்திய அணியில் பந்துவீச்சை பும்ரா, ஷமி, பிரசித் கிருஷ்ணா என வலிமையாய் அமைத்திருந்தார்கள்.

இங்கிலாந்து அணிக்காக பேட்டிங்கை துவங்க ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினார்கள். ஆடுகளத்தில் கொஞ்சம் புல் இருக்க, பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளமாகவே காணப்பட்டது. ஆட்டத்தின் முதல் ஓவரை ஷமி வீச ஆறு ரன் வந்தது. அடுத்த ஓவரை வீசிய பும்ரா பந்தை உள்ளே வெளியே என எடுத்ததும் பேச வைத்து, இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாக்கி ஜேசன் ராயை வழியனுப்பி வைத்ததோடு, அடுத்து வந்த நட்சத்திர வீரர் ஜோ ரூட்டையும் வெளியேற்றினார்.

இதற்கடுத்து பென் ஸ்டோக்ஸ் களத்திற்கு வர, அரவுண்ட த விக்கெட்டில் இருந்து ஷமி வீச, ஸீமில் பட்டுத் தெறிந்த பந்து உள்நோக்கி போய், பென் ஸ்டோக்ஸின் பேட்டில் இன்-ஸைட் எட்ஜ் எடுத்து, கீப்பர் பக்கமாய் பறந்தது. பிடிப்பதற்கு கடினமான இது போன்ற இன்-ஸைட் எட்ஜ் கேட்ச்சை காற்றில் பந்தோடு பறந்து ரிஷான் பண்ட் அற்புதமாய் கேட்ச் செய்தார்.

- Advertisement -

இன்று பந்து காற்றில் நகர்வது அதிகமாய் இருந்தது, விக்கெட் கீப்பர் பந்தை பிடிக்க சிரமமாகவே இருந்தது. பும்ராவின் இன்னொரு ஓவரில் ஜானி பேர்ஸ்டோ எட்ஜ் செய்ய, வேகமாய் கிளம்பிய பந்தை சரியாய் கணித்து வலப்புறமாய் சரிந்து ஒற்றைக் கையால் திறமையாக கேட்ச் செய்து வெளியேற்றினார்.

இந்த ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட்டின் செயல்பாடும் மிகச்சிறப்பாக இருக்கிறது. இங்கிலாந்து தற்போது இழந்த ஐந்து விக்கெட்டுகளில் நான்குபேர் டக் அவுட்டாகி பெவிலியன் போயிருப்பது குறிப்பிடத்தக்கது!