ரிஷப் பண்ட் வலது கையில் பேட்டிங் ஆடும் வீடியோ எடிட் ! அச்சு அசல் தோனி தான் – வீடியோ இணைப்பு

0
256
Rishabh Pant batting right handed

இந்திய இடக்கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷாப் பண்ட், இந்திய விக்கெட் கீப்பர்களில் பல சாதனைகளை தனது 24 வயதில் படைத்து வருவதோடு, உலக விக்கெட் கீப்பர்களிலும் சாதனைகளைப் படைத்து வருகிறார். அவரது விக்கெட் கீப்பிங்கும், பேட்டிங் அணுகுமுறையும் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது!

இந்திய விக்கெட் கீப்பர்களில் ஆசியாவுக்கு வெளியே ஐந்து சதங்களை அடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட்தான். மற்றவர்கள் அடித்தது ஒன்றே ஒன்று. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியின் முதல் சதத்தை வெளிநாட்டில் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட்தான். இந்தியாவிற்கு வெளியே ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் அடித்த இந்திய விக்கெட் கீப்பர். ரிஷாப் பண்ட்தான் 350 ரன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடித்தார்.

- Advertisement -

ஒரு தொடரில் விக்கெட் கீப்பராக அதிக டிஸ்மிசல்கள் செய்தவர் ரிஷாப் பண்ட்தான். 2011-2013 உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் பத்து டெஸ்டில், 19 இன்னிங்ஸில் 39 டிஸ்மிசல்களை செய்திருக்கிறார். தொடர் எஞ்சியிருப்பதால் இந்தச் சாதனையின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். விக்கெட் கீப்பராக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக டிஸ்மிசல்களை செய்தவர்களில் ரிஷாப் பண்ட்டும் ஒருவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டு டெஸ்டில் 11 டிஸ்மிசல்கள் செய்திருக்கிறார். ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட்தான். நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை 720 ரன்கள் அடித்திருக்கிறார். இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் 146, 57 என 203 ரன்களை அடித்திருக்கிறார். 142 வருட கிரிக்கெட் வரலாற்றில் எந்த விக்கெட் கீப்பரும் இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக இதைச் செய்ததில்லை.

இன்னும் குறைந்த வயதில் அதிக சிக்ஸர், குறைந்த போட்டியில் அதிக சிக்ஸர் என்று இந்திய அளவில் இப்படி சின்ன சின்ன சாதனைகள் நிறைய இருக்கிறது. இந்திய அணிக்குள் அவர் வந்த காலத்தில், அவரது பேட்டிங் மட்டுமல்லாது, விக்கெட் கீப்பிங் செயுல்பாடும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பின்பு சுதாரித்து எல்லாவற்றிலும் இருந்து மீண்டு வந்தார். ஆனால் சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா அணியுடனான டி20 தொடரில் அவரது பேட்டிங் மீண்டும் பலத்த விமர்சனத்தைச் சந்தித்தது!

இந்த நிலையில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பெற்று, நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் 146, 57 என ரன்கள் அடித்து அசத்தினார். அடுத்து ஒருநாள் போட்டி தொடரின், கோப்பை யாருக்கென்ற மூன்றாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 125* ரன் அடித்து, இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்.

- Advertisement -

தற்போது ரிஷாப் பண்ட் இங்கிலாந்துடன் விளையாடிய தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் அவர் அடித்த பவுண்டரிகள், சிக்ஸர்கள் கொண்ட வீடியோ ஒன்றை, ரிஷாப் பண்ட் வலது கையால் விளையாடுவதுபோல் மாற்றி வெளியிட்டு இருக்கிறார். அதை அப்படி பார்க்கையில் ஷாட்ஸ்கள் இன்னும் அழகாய் தெரிகிறது. முக்கியமாக ஆப்-ஸைடில் அவர் அடிக்கும் கட் ஷாட், தோனி பலம் கொண்டு பளார் என்று பந்தை அறையும் கட் ஷாட் போலவே இருக்கிறது. தற்போது இது சமூக வலைத்தளங்களில் பெரிதாய் பகிரப்பட்டு வருகிறது!