கிரிக்கெட்

இந்திய அணியுடன் கடைசியாக ரவி சாஸ்திரி பகிர்ந்துகொண்ட வார்த்தைகள் – நெகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

இந்திய அணியின் டி20 உலகக் கோப்பை நேற்றைய நமிபிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் முடிவுக்கு வந்துள்ளது. கோப்பையை வென்று நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணி அரையிறுதிக்கு கூட செல்லாமல் சூப்பர் 12 சுற்றுடன் நாடு திரும்பி உள்ளது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே கேப்டன் விராட் கோலி இந்த தொடர் முடிந்தவுடன் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார். அதேபோல நேற்றைய ஆட்டத்தில் கேப்டனாக தனது கடைசி ஆட்டத்தை வழி நடத்தி தனது கேப்டன்சி பதவியை முடித்துக்கொண்டார் கோலி. விராட் கோலிக்கு பிறகு தற்போதைய இந்திய அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள முக்கியமான நபர்களில் ஒருவர் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

- Advertisement -

கடந்த ஐந்து வருடங்களாக இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த இவர் இந்த உலகக் கோப்பையுடன் தனது பயணத்தை முடித்துக் கொள்கிறார். நேற்று நமீபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியுடன் தனது பயிற்சியாளர் பதவியை நிறைவு செய்தார். இதன் பின்பு இறுதியாக இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூமில் அவர் பேசும்பொழுது இந்திய அணி மீது தான் வைத்திருந்த எதிர்பார்ப்பை இந்த அணி மிஞ்சி விட்டதாக அவர் கூறினார். மேலும் இந்த அணி சிறந்த அனைவரும் ஒன்றாக இருந்ததாகவும் உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள அணிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடி வலம் வந்ததாகவும் அவர் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

பல வருடங்களாக எட்டாமல் இருந்த ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் சீரிஸ் வெல்வது இங்கிலாந்து சென்று சிறப்பாக டெஸ்ட் போட்டிகளில் செயல்படுவது போன்றவைகளெல்லாம் ரவி சாஸ்திரியின் காலத்தில்தான் இந்திய அணிக்கு கிடைத்தது. மேலும் இந்திய அணி பல நாடுகளுக்குச் சென்று டி20 தொடர்களையும் ஒருநாள் தொடர்களையும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. வெளிநாடுகளில் இத்தனை சிறப்பாக இந்திய அணி செயல்பட்டது கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் தான் என்பதால் ரவி சாஸ்திரியின் பங்கு மிக மிக முக்கியமாகும்.

ரவி சாஸ்திரி பதவி விலையில் உள்ள நிலையில் மீண்டும் வர்ணனையாளராக அவரை எதிர்பார்க்கலாம் என்று அனைத்து ரசிகர்களும் அதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

- Advertisement -
Published by