மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 45 ரன்கள் குவித்துள்ளார். குஜராத் அணியில் சிறப்பாக பந்து வீசிய ரஷீத் கான் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி 24 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.
போட்டியின் இடையே நடந்த குளறுபடி
ஏழாவது ஓவரை பிரதீப் சங்வான் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை இஷான் கிஷன் எதிர்கொண்டார். கவர் திசையில் அவர் அடித்த பந்தை அங்கு நின்று கொண்டிருந்தார் ரஷீத் கான் தட்டுத்தடுமாறி பிடித்தார்.
கீழே உருண்டு படி தட்டுத் தடுமாறிய விதத்தில் அவர் ஸ்டம்பை நோக்கி பந்தை வீச முயற்சி செய்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்குப் பின் பக்கமாக அந்த பந்து சென்றது. பின்னர் உடனடியாக எழுந்து அந்த பந்தை மறுபடியும் ஸ்டம்பை நோக்கி ரஷீத் கான் வீசினார். இம்முறை ஸ்டம்பில் படாமல் பவுண்டரையை நோக்கி வேகமாக விரைந்து. அங்கே நின்று கொண்டிருந்த ஃபீல்டர் எடுத்து வீச நல்ல வேளையாக அது பவுண்டரிக்கு செல்லவில்லை.
இருப்பினும் ஒரு ரன் மட்டுமே வரவேண்டிய அந்த பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2 ரன்கள் கிடைத்தது. இந்த நிகழ்வு நடந்த பின்னர் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷீத் கான் இருவரும் நடந்ததை நினைத்து கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
— Jemi_forlife (@jemi_forlife) May 6, 2022