ஷாஹீன் அப்ரிடி ஓவரில் அப்பர் கட் சிக்ஸ் ; தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசி அதிரடி காட்டி வரும் புஜாரா – வீடியோ இணைப்பு

0
3046
Pujara County Cricket

இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். இந்திய அணியிலிருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு, அவர் டெஸ்ட் அணியில் பேட்டிங்கில் களமிறங்கும் மூன்றாவது வரிசையில் களம் கண்டு, ராகுல் டிராவிட்டின் இடத்தைப் பூர்த்தி செய்து விட்டாரென்று பலராலும் கருதப்பட்டவர் செதேஷ்வர் புஜாரா.

ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக இவரது பேட்டிங் பெரிய சரிவை கண்டிருந்தது. செளத்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரில் இவரது பேட்டிங் பார்ம் மேலும் மோசமடைய, இலங்கை உடனான டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டு, உள்நாட்டு ரஞ்சி தொடரில் ஆடுமாறு பி.சி.சி.ஐ-ஆல் அறிவுறுத்தப்பட்டார். ரஞ்சி ஆட்டத்திலும் டக்குகளையே கண்டார்.

- Advertisement -

இந்த நிலையில்தான் இழந்த பேட்டிங் பார்மை மீட்கும் பொருட்டு, இங்கிலாந்தின் கவுண்டி கிளப்பான சஸ்செக்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்து விளையாடி வருகிறார். இந்திய அணி ஐ.பி.எல் முடிந்து இங்கிலாந்து அணியுடன் மீதம் வைத்திருக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு டெஸ்ட் ஆட்டத்திற்கு, கவுன்டி போட்டிகளில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியில் இடம் பிடிப்பதுதான் இவரது திட்டமாக இருந்தது. இந்த திட்டத்தை புஜாரா ஏறக்குறைய நிறைவேற்றி விட்டாரென்றே கூறலாம். சஸ்சக்ஸ் அணிக்காக இதுவரை விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் சதமடித்து அசத்தியிருக்கிறார். இதில் ஏழு இன்னிங்ஸில் இரண்டு இரட்டை சதம், ஒரு சதம், ஒரு அரைசதமென கலக்கி வருகிறார்.

சஸ்சக்ஸ் அணி கடந்த சனிக்கிழமை மிடில் சக்ஸ் அணியை எதிர்த்து களமிறங்கிறது. 6/2 என்று சஸ்செக்ஸ் அணி தடுமாற களமிறங்கிய புஜாரா 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இது நான்கு ஆட்டங்களில் அவரது ஐந்தாவது 100 ரன் பார்ட்னர்ஷிப்பாகும். மேலும் நின்று விளையாடிய அவர், பாகிஸ்தானின் ஷாகின் ஷா அப்ரிடியின் ஓவரில் அட்டகாசமாக சிக்ஸர் அடித்து, தனது தொடர் நான்காவது சதத்தைப் பூர்த்தி செய்தார். சனிக்கிழமை மூன்றாவது நாள் ஆட்ட நேரம் முடியும் போது, புஜாரா ஆட்டமிழக்காமல் 149 பந்துகளில், 125 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்!

- Advertisement -