போட்டி நடைபெறுவதற்கு முன்னரே நம்பிக்கையுடன் ரின்கு சிங் செய்த காரியம் – சொன்னதை செய்துக் காட்டியதால் நிதிஷ் ரானா ஆச்சரியம்

0
238
Rinku Singh

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலாக நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 54 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி ஆட்டத்தின் இறுதி ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதீஷ் ரானா 37 பந்துகளில் 48* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

- Advertisement -
அதிரடியாக விளையாடிய ரின்கு சிங்

நேற்று கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரின்கு சிங் நிதிஷ் ரானாவுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து மிக நிதானமாக விளையாடினார்கள்.ஒரு கட்டத்தில் கடைசி 3 ஓவர்களில் 31 தேவைப்பட்டது.

ஆனால் எந்தவித அழுத்தமுமின்றி ரின்கு சிங் மிக அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணியின் ஸ்கோரை அடுத்த இரண்டு ஓவர்களிலேயே உயர்த்தினார். நேற்றைய போட்டியில் ரின்கு சிங் 23 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 42* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று போட்டி நடந்து முடிந்த பின்னர் நிதிஷ் ரானா மற்றும் ரின்கு சிங் இடையே ஒரு உரையாடல் நடந்தது. நிதிஷ் ரானா ரின்கு சிங்கின் கையை கேமராவுக்கு காண்பித்தார். தன்னுடைய கையில் ரின்கு சிங் 50 நாட் அவுட் என்பது போல பேனாவால் எழுதியிருந்தார். அதன் கீழ் ஒரு ஹார்ட் இமேஜியும் வரைந்திருந்தார்.

- Advertisement -

அந்த போட்டியில் நிச்சயம் தான் 50* அடிக்கப் போகிறேன் என்கிற நம்பிக்கையில் அவ்வாறு எழுதி இருந்ததாக நிதிஷ் ரானாவிடம் ரின்கு சிங் விளக்கினார். இவர்கள் இருவரும் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.