ஹர்ஷல் பட்டேல் & ஹசரங்கா ஸ்டெம்புகளை பறக்க விட்ட நடராஜான் ; அதிரடி ஃபார்மில் இருக்கும் தமிழக வீரர் – வீடியோ இணைப்பு

0
1839
Natarajan bowled Harshal Patel

ஐ.பி.எல் 15-வது சீசனில், டபுள் ஹெட்டர் நாளான இன்று, தொடரின் 36வது ஆட்டத்தில், பாஃப்பின் பெங்களூர் ராயல் சேலன்ஞர்ஸ் அணியும், வில்லியம்சனின் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும், மும்பையின் ப்ரோபோர்ன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

பெங்களூர் அணி புள்ளி பட்டியலில், ஏழு ஆட்டங்களில் ஐந்தில் வென்று பத்துப் புள்ளிகளோடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆறு ஆட்டத்தில் நான்கை வென்று எட்டுப் புள்ளிகளோடு ஹைதராபாத் ஐந்தாமிடத்தில் இருக்கிறது. இரு அணிகளுமே கடந்த ஆட்டத்தின் பழைய அணியோடு போட்டிக்கு வந்தன.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். பெங்களூர் அணிக்குத் துவக்கம் தருவதற்காக கேப்டன் பாஃப்பும், அனுஜ் ராவத்தும் களம் புகுந்தனர். இதற்குப் பின் ஹைதராபாத் பவுலர்கள் பவுலிங்கில் ஒரு வதைப்படலத்தையே நிகழ்திவிட்டார்கள்.

கேப்டன் பாஃப், விராட், அனுஜ் ராவத், மேக்ஸ்மெல், பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமத் என ஏழு விக்கெட்டுகள் 49 ரன்களுக்கே ஹைதராபாத் பவுலர்கள் அடித்துப் பறித்துவிட்டார்கள். யான்சென்னின் துல்லியம் ஒருபுறம் என்றால், உம்ரான் மாலிக்கின் அனல் தெறிக்கும் வேகம் ஒருபுறம்.

- Advertisement -

இதில் நடராஜன் வீசவந்த ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் மேக்ஸ்வெல்லை வெளியேற்றினார். அதற்கடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் 13வது ஓவரில் நடராஜனை திரும்ப அழைக்க, எட்டாவது விக்கெட்டாய் ஹர்சல் படேலையும், அடுத்து ஹசரங்காவையும் கிளீன் போல்டாக்கி, ஸ்டம்ப் பறக்க பெவிலியன் அனுப்பி வைத்தார். எட்டு விக்கெட்டுகளை 65 ரன்களுக்கு இழந்து பெங்களூர் ஆடிவருகிறது!

- Advertisement -