பந்தைப் பிடித்து விராட் கோலியின் மேல் எறிந்த முகேஷ் சவுத்ரி ; விராட் கோலியின் பதில் இதுதான் – வீடியோ இணைப்பு

0
3112
Mukesh Choudhary throws ball at Virat Kohli

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 48-வது போட்டியில், மஹராஷ்ட்ராவின் புனே மைதானத்தில், பாஃப்பின் பெங்களூர் அணியும், தோனியின் சென்னை அணியும் தற்போது மோதி வருகின்றன. கடலுக்குத் தூரமாக இருப்பதால் புனே மைதானத்தில் பனிப்பொழிவின் இடையூறு பெரிதாய் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் அணி பத்து ஆட்டங்களில் ஐந்து வெற்றி பெற்றுப் பத்துப் புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. அடுத்து வரவிருக்கும் நான்கு ஆட்டத்தில் மூன்று ஆட்டங்களையாவது பெங்களூர் அணி ப்ளே-ஆப்ஸ்க்கு வெல்ல வேண்டும். சென்னை அணி ஆடிய ஒன்பது ஆட்டங்களில் மூன்று ஆட்டங்களை வென்று, ஆறு புள்ளிகளோடு, புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. சென்னை அடுத்து வரும் அனைத்து ஆட்டங்களையும் வென்றால்தான், ப்ளே-ஆப்ஸ்க்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய ஆட்டத்துக்கான டாஸில் வென்ற மகேந்திர சிங் தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூர் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. சென்னை அணியில் சான்ட்னருக்குப் பதில் மொயீன்அலி வந்திருக்கிறார்.

பாஃப், விராட் பெங்களூர் அணியின் பேட்டிங்கை துவங்க வர, முதல் ஓவரை முகேஷ் வீச, அடுத்த ஓவரை சிமர்ஜித் சிங் வீச, மூன்றாவது ஓவரில் விராட்கோலிக்கு நேராக முகேஷ் வீச, விராட்கோலி பந்தை இறங்கி வந்து நேராக தட்ட, பந்தைப் பிடித்த முகேஷ் ரன்அவுட் செய்ய, பந்தை நேராக அடிக்க, அது விராட்கோலியின் பின்புறத்தில் தாக்கியது. ஆனால் முகேஷ் மன்னிப்பு கேட்க, விராட்கோலி உடனே பரவாயில்லை என்பதுபோல் தம்ஸ்அப் காட்டி ஏற்றுக்கொண்டார்!