ரோஹித் ஷர்மா & இஷான் கிஷன் டக் அவுட் ; முதல் ஓவரிலேயே முக்கேஷ் சவுத்ரி அதிரடி பந்துவீச்சு – வீடியோ இணைப்பு

0
400
Ishan Kishan and Rohit Sharma duck out

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் மிக முக்கியமான போட்டி இன்று என்று சொன்னால் மிகையல்ல. ஐ.பி.எல் தொடரின் பங்காளிகளான சென்னையும் மோதிக் கொள்வதால்தான் இன்றைய போட்டி முக்கியத்துவம் ஆனதாய் மாறியிருந்தது.

ஐ.பி.எல் தொடரில் ஒருபோதும் இரண்டு அணிகளும் ஒருசேர மோசமாய் செயல்பட்டதே இல்லை. ஆனால் இந்த முறை இரண்டு அணிகளின் செயல்பாடும் மோசமாக இருக்கிறது. சென்னை அணி ஆறில் ஐந்து ஆட்டங்களையும், மும்பை ஆடிய ஆறு ஆட்டங்களையும் தோற்று, புள்ளி பட்டியலின் ஆழத்தில் கிடக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் இன்று மும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மோதி வருகின்றன. சென்னை அணி மொயீன் அலி, ஜோர்டானை நீக்கிவிட்டு ப்ரட்டோரியஸ், சான்ட்னரை அணிக்குள் கொண்டுவந்திருக்கிறது. மும்பை அணி பேபியன் ஆலன், பசில் தம்பி, மில்ஸ் ஆகியோரை நீக்கிவிட்டு, சாம்ஸ், சோகி, மெரிடித் ஆகியோரை கொண்டுவந்திருந்தது.

முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்ய, முகேஷ் செளத்ரி முதல் ஓவரை வீசவந்தார். ரோகித்-இஷான் ஜோடி மும்பைக்கு பேட்டிங்கை துவக்க வர, ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் டக்அவுட் ஆனார் ரோகித் ஷர்மா. அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் இஷானும் கிளீன் போல்டாகி டக்-அவுட் ஆனார்.

ஐ.பி.எல் தொடரில் மொத்தமாய் 14 முறை ரோகித் ஷர்மா டக்-அவுட் ஆயிருக்கிறார். ஆனால் இதுதான் சீக்கிரமானது. அதேபோல் இதுவரையில் சென்னை அணியின் பவுலர் முதல் ஓவரில் இரு விக்கெட்டுகளை எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -