இஷன் கிஷனை வெளியேற்ற தோனி செய்த அற்புதமான ஃபீல்ட் செட்டப்

0
146
Suresh Raina

நேற்று ஐபிஎல் தொடர் மீண்டும் அமீரகத்தில் துவங்கியது. கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்ட இந்த தொடர் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. முதலில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சென்னை அணி நிச்சயம் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறாது என்று பல சென்னை ரசிகர்களை நினைத்தனர். ஆனால் அத்தனை பேரின் எண்ணங்களையும் மாற்றி சென்னை அணி இந்த போட்டியில் அற்புதமாக வெற்றி பெற்றது.

சென்னை அணியின் வெற்றிக்கு கேப்டன் தோனியும் ஒரு முக்கிய காரணம். பேட்டிங்கில் சரியாக விளையாடா விட்டாலும்ம் தனது கேப்டன்சி மூலம் இந்த போட்டியில் சென்னை நோக்கி அவர் வெற்றி தேடித் தந்துள்ளார். சென்னை அணி முதலில் விளையாடிய 156 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு கலந்து கொண்ட மும்பை அணி வேகமாக மூன்று விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது களத்தில் புதிதாக சவுரப் திவாரி மற்றும் இஷன் கிஷன் என இரண்டு வீரர்கள் இருந்தனர்.

- Advertisement -

சிறிய டார்கெட் என்பதால் விக்கெட்டுகளை வீழ்த்துவதே அணிக்கு வெற்றி தேடித் தரும் என்பதை கேப்டன் தோனி நன்கு உணர்ந்திருந்தார். அதனால் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு தனது கேப்டன்சி அனுபவத்தை பயன்படுத்த தொடங்கினார் தோனி. கிஷன் இளம் வீரர் என்பதால் ரன் ரேட் உயர்வால் நிச்சயம் அதை பார்த்துக்கொண்டு பெரிய ஷாட்டுக்கு போவார் என்பதை உணர்ந்திருந்தார் தோனி. அதனால் கவர் திசையில் நின்று கொண்டிருந்த ஃபீல்டிங் வீரர் ஒருவரை ஒன்பதாவது ஓவர் ஆரம்பிக்கும் போது ஷார்ட் கவர் திசைக்கு அழைத்து வந்தார் தோனி.

இந்த திட்டத்திற்கு பந்துவீச தனது மித வேகப்பந்து வீச்சாளரான மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த பிராவோவை அழைத்து வந்தார். அவரும் காலத்திற்கு ஏற்றது போல பந்தை வீச தோனி விரித்த வலையில் விழுந்தார் கிஷன். சரியாக ஷார்ட் கவர் திசையில் தோனி நிற்க வைத்து இருந்த சுரேஷ் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கிஷன். சிறிது நேரம் களத்தில் நின்றால் கூட ஆட்டத்தை மாற்றும் இஷன் கிஷனின் விக்கெட்டை தோனி தனது கேப்டன்சி அனுபவத்தின் மூலம் எடுத்த வீடியோவை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.