2011 உலகக்கோப்பை பைனலில் அடித்த சிக்ஸரை, ஐபிஎல் பயிற்சியில் ரீ-கிரியேட் தோனி… உலகக்கோப்பை வாங்கி இன்றோடு 12 வருடங்கள் நினைவாக!

0
79

இந்திய அணி உலககோப்பை வென்று 12 வருடங்கள் நினைவாக, பைனலில் அடித்த சிக்ஸரை ரீ-கிரியேட் செய்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோவை கீழே காண்போம்.

2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலககோப்பையை இந்திய ரசிகர்கள் எவராலும் மறக்க இயலாது. கடைசியாக, 1983 ஆம் ஆண்டு கப்பில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்றிருந்தது.

- Advertisement -

28 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற பெயரும் இந்திய அணியின் மீது இருந்தது. 2011ஆம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடிய இந்திய அணிக்கு தோனி தலைமை ஏற்றார். இவர் 2007ஆம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியாவிற்கு பெற்று கொடுத்ததால், இந்த உலகக் கோப்பையையும் பெற்று தருவார் என்று பலரும் தோனி மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.

காலிறுதியில் ஆஸ்திரேலியா, அரையிறுதியில் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்திய பலத்துடன் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொண்டது. பைனலில் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், பின்னர் கம்பீர் உடன் பாட்னர்ஷிப் அமைத்து இறுதிவரை நின்று சிக்சர் அடித்து போட்டியை முடித்து கொடுத்தார்.

2011ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாம் தேதி இறுதிப்போட்டி நடந்தது. அதில் தோனி சிக்ஸர் அடித்து பினிஷ் செய்ததை இன்றளவும் எவராலும் மறப்பதில்லை. ஏப்ரல் இரண்டாம் தேதி, 2023 ஆம் ஆண்டு 12 வருடங்கள் நினைவை போற்றும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த சிக்சரை ரீ-கிரியேட் செய்துள்ளார் தோனி. இதன் வீடியோவை சென்னை ஐபிஎல் லிட்டர் பக்கம் வெளியிட்டு இருந்தது

- Advertisement -

வீடியோ: