இந்திய கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல் இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி, நேற்று ஒரு ஹை-கோரிங் போட்டியா நடந்து, இரசிகர்கள செமயா என்டர்டையின் பண்ணி இருக்கு!
பெங்களூர் அணி கேப்டன் பாஃப் டாஸ் ஜெயிச்சி பீல்டிங்கை தேர்வு செய்ய, சென்னை அணியின் உத்தப்பா, சிவம்துபே ஜோடி, பாஃப் எடுத்த முடிவை தப்பாக்கியது. இருவரும் சேர்ந்து சிக்ஸர்களாக நொறுக்கித்தள்ள, சென்னை அணி அதிரடியாய் 216 ரன்களை குவித்தது!
அடுத்து பேட் செய்ய வந்த பெங்களூர் பேட்ஸ்மேன்கள் வரிசையா வெளியேற, பெங்களூர் அணிக்கு எதுவுமே சரியா அமையவில்லை. இறுதியில் பெங்களூர் அணி 193 ரன்களை மட்டுமே அடிக்க, சென்னை போட்டியை வென்றது. சென்னைத் தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய தீக்சனா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சென்னை அணியின் பந்துவீச்சின் போது, பிராவோ ஓவரில் பிரபுதேசாய்க்கும், தீக்சனா ஓவரில் தினேஷ் கார்த்திக்கும் வந்த எளிமையான கேட்ச் வாய்ப்புகளை, சென்னை அணியின் இளம் வீரர் முகேஷ் தவறவிட்டு இரசிகர்களையும், அணியினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
தினேஷ் கார்த்திக் முகேசால் தப்பித்த அதே ஓவரில், தீக்சனா பிரபுதேசாயை க்ளீன் போல்டாக்கி பெவிலியன் அனுப்பினார். அந்த இடைவெளியில் ஏமாற்றத்தில் இருந்த இளம் வீரர் முகேஷிடம் ஓடிச்சென்ற மகேந்திர சிங் தோனி, ஆறுதலான நம்பிக்கையான வார்த்தைகளை, அவரது தோளில் கையைப்போட்டு பேசிவிட்டு வந்தார். இது இப்போது சமூக வலைத்தளங்களில் தோனி குறித்து மகிழ்ச்சியாக, பாராட்டாக பகிரப்பட்டு வருகிறது!
Dhoni straight went to Mukesh Choudhary who dropped catch after wicket #CSKvsRCB #IPL2022 pic.twitter.com/08DKl2U7zJ
— Gauπav (@virtual_gaurav) April 12, 2022