வார்னர் விக்கெட் போனதும் தெரியாமல் பெவிலியனில் தூங்கிக்கொண்டிருந்த லபுஜானே வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது. இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 151 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்து 318 ரன்கள் பின்தங்கி இருந்தது.
இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஸ்ரீகர் பரத் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ஏழாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரகானே மற்றும் தாக்கூர் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சதமடிப்பார் என பார்க்கப்பட்ட ரஹானே, துரதிஷ்டவசமாக லஞ்ச் முடிந்த அடுத்த சில ஓவர்களிலேயே ஆட்டம் இழந்தார். 89 ரன்கள் அடித்திருந்தார். கடைசி வரை போராடிய தாக்கூர் 51 ரன்கள் அடிக்க, இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி துவக்கத்திலேயே சிராஜ் பந்தில் வார்னர் விக்கெட்டை இழந்தது. அடுத்ததாக களமிறங்க வேண்டிய லபுஜானே பெவிலியனில் சேரில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். வார்னர் ஆட்டமிழந்தது தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த அவர், வார்னர் அவுட்டாகிவிட்டார் நாம் களமிறங்க வேண்டும் என்று தெரிந்தவுடன் லபுஜானே கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் வீடியோவை பின்வருமாறு காணலாம்.
— Vaishnavi Iyer (@Vaishnaviiyer14) June 9, 2023