ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 31-வது போட்டியில், கே.எல்.ராகுலின் லக்னோ அணியும், பாஃப் டூ பிளிசிஸின் லக்னோ அணியும், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நேற்று மோதின. ஆட்டத்தில் பனிப்பொழிவின் தாக்கம் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
டாஸை வென்ற கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்ய, அனுஜ் ராவத்தும், விராட்கோலியும், மேக்ஸ்வெல் சீக்கிரத்தில் வெளியேறினார்கள். ஆனால் கேப்டன் பாஃப், ஷாபாஸ் அகமத்துடன் 70 ரன் பார்ட்னர்ஷிப், தினேஷ்கார்த்திக் உடன் 49 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து, 64 பந்தில் 96 ரன்கள் குவித்து, பெங்களூர் அணியை 181 ரன்களை எட்ட வைத்தார்.
அடுத்து களமிறங்கிய லக்னோவிற்கு எல்லாரும் ஓரளவிற்கு ரன் அடிக்க, ஆட்டம் யார் பக்கமும் சாயாமலே 18-வது ஓவர் வரை சென்றது. இதற்கு நடுவில் கேப்டன் கே.எல்.ராகுல், க்ரூணால் பாண்ட்யா குறிப்பிடத்தக்க பங்களிப்பை பேட்டிங்கில் வழங்கி இருந்தனர்.
ஆனால் ஹேசில்வுட் வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரின் முதல் பந்திலிருந்து எல்லாம் மாறிவிட்டது. ஆப்-ஸைட் வெளியே வைடாக போன அந்தப் பந்திற்கு அம்பயர் வைட் தரவில்லை. அவர் மேற்கொண்டும் அப்படி வீசினால் வைட் தரமாட்டாரென்று, ஸ்ட்ரைக்கிலிருந்த ஸ்டாய்னிஸ் ஸ்டம்ப்பை விட்டு விலகிபோய் அடிக்க முயற்சி செய்ய, போல்ட்டாகி ஆட்டமிழந்து விட்டார். இதனால் ஆட்டம் பெங்களூர் பக்கம் சாய்ந்து, லக்னோ தோல்வியடைந்தது.
Marcus Stoinis adding some extra colorful vocabulary to this night of IPL action. pic.twitter.com/vGf7d2oIFp
— Peter Della Penna (@PeterDellaPenna) April 19, 2022
அம்பயரின் ஒரு தவறான முடிவு, ஆட்டத்தின் மொத்தத்தையும் மாற்றக்கூடியதாய் அமைந்திருக்கிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் வைட் பார்க்கவும் டி.ஆர்.எஸ் அப்பீல் முறை கொண்டுவரலாமென்று கிரிக்கெட் இரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றர்!