விரக்தியுடன் நடந்து சென்ற பொல்லார்டின் தலையில் முத்தத்தை பதித்த குருனால் பாண்டியா – வீடியோ இணைப்பு

0
1089
Krunal Pandya kiss Kieron Pollard

ஐந்து முறை பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த நிலைமையா என்று சொல்லும் அளவிற்கு மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அந்த எட்டு போட்டியிலும் தொடர்ச்சியாக தோல்வியடைந்து மோசமான ரெக்கார்டை தற்பொழுது வைத்துள்ளது.

நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது.

- Advertisement -

லக்னோ அணியில் கேப்டன் கேஎல் ராகுல் அதிகபட்சமாக 103 ரன்கள் குவித்தார். பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கேப்டன் ரோஹித் அதிகபட்சமாக 39 ரன்கள் குவித்தார். போட்டியின் முடிவில் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் நடந்த சுவாரசியம்

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவரில் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரரான குருனால் பாண்டியார் வீசினார்.

அந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, 2 ரன்கள் மட்டுமே அவர் கொடுத்தார். முதல் பந்தை வைடாக வீசிய அவர் இரண்டாவது பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் பொல்லார்டின் விக்கெட்டை கைப்பற்றினார். நேற்றைய போட்டியில் பொல்லார்ட் 20 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே குவித்தார்.

- Advertisement -
தலையில் முத்தமிட்ட குருனால் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணியும் அதனுடைய ரசிகர்களும் நேற்றைய போட்டியில் பொல்லார்டு அதிரடியாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற வைப்பார் என்று நம்பினார். ஆனால் நேற்று பொல்லார்ட் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை. தன்னுடைய விக்கெட்டை இழந்ததும் அவர் சற்று விரக்தியாக காணப்பட்டார்.

விரக்தியுடன் பெவிலியன் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த அவரின் தலையில் குருனால் பாண்டியா முத்தமிட்டார்.அவ்வாறு தலையில் முத்தமிட்டதும் எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக நடந்து சென்றார்.

போட்டி முடிந்ததும் “நான் இன்றைய போட்டியில் பொல்லார்டின் விக்கெட்டை கைப்பற்றியதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஏனெனில் என்னுடைய விக்கெட்டை அவர் கைப்பற்றினார், அவருடைய விக்கெட்டை நான் கைப்பற்றி இருக்கிறேன். தற்பொழுது கணக்கு 1-1 என சரியாகி விட்டது. ஒருவேளை நான் அவருடைய விக்கெட்டை கைப்பற்றாமல் போயிருந்தால், என்னுடைய விக்கெட்டை கைப்பற்றியதை சுட்டிக்காட்டி இடைவெளி விடாமல் என்னிடம் பேசியே கலாய்த்து தள்ளி இருப்பார் என்று குருனால் பாண்டியா புன்னகையுடன் கூறினார்.

நேற்று சமூகவலைதளத்தில் ரசிகர்கள், “நல்லவேளை நேற்று பொல்லார்டு நல்ல மூடில் இருந்தார், இல்லையெனில் நேற்று அவ்வாறு தலையில் முத்தமிட்ட குருனால் பாண்டியாவை கோபத்தில் ஏதேனும் செய்திருப்பார் என்பது போன்ற கமெண்டுகளை பதிவு செய்தனர்.”