உங்களுக்கு கேப்டன்சி திறன் உள்ளதா என்று எதிர்மறையாக கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை கேலி செய்த கே.எல்.ராகுல் – வீடியோ இணைப்பு

0
767
KL Rahul Pressmeet Conference

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி பெற்றது. டெஸ்ட் தொடரை இழந்ததும் இந்திய அணி சிறப்பாக விளையாடி ஒருநாள் தொடரில் அதற்கு பழிதீர்க்கும் என்று ரசிகர்கள் காத்திருந்தபோது ஒருநாள் தொடரையும் இந்திய அணி தோல்வியுடன் துவக்கியுள்ளது. இந்தத் தொடருக்கு முன்பு வழக்கமான கேப்டன் விராட் கோலி பதவி விலகியதால் ரோகித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால் தொடர் ஆரம்பிப்பதற்கு சிறிது நாட்கள் முன்பு ரோஹித்துக்கு காயம் ஏற்பட்டதால் ரோகித்துக்கு பதிலாக ராகுல் கேப்டனாக இருப்பார் என்று பிசிசிஐ அறிவித்தது. ஏற்கனவே ஒரு போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விலகிய போது ராகுல் கேப்டனாக இருந்து அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்றது. ஒருநாள் தொடரிலாவது ராகுல் தன்னுடைய சிறப்பான கேப்டன் திறமை வெளிப்படுத்துவார் என்று காத்திருந்தபோது அதிலும் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியுற்றது.

- Advertisement -

ஒருகட்டத்தில் தென்ஆப்ரிக்க அணியை வெறும் அறுபத்தி எட்டு ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழக்கச் செய்த இந்திய அணியால் அதன் பிறகு அந்த அணியை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அணியின் கேப்டன் பவுமா மற்றும் வான்டர் டுசன் இருவரும் கடைசி வரை நின்று சதம் கடந்தனர். இவர்களைப் பிரிக்க ராகுல் எந்த ஒரு வித்தியாசமான முயற்சி எடுக்காதது சமூக வலைதளங்களில் பெரிதாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராகுல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஐபிஎல் தொடர் மற்றும் சமீபத்திய டெஸ்ட் தொடரில் நீங்கள் சிறப்பாக கேப்டன்சி திறமையை வெளிப்படுத்தாத போதும் இந்த ஒருநாள் தொடரில் எப்படி கேப்டனாக செயல்பட போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் கூறிய ராகுல் உங்கள் தகவலுக்கு நன்றி என்றும் இது தனக்கு அதிக உற்சாகத்தை தரக்கூடியது என்றும் கூறினார்.

ஆனால் ஒருநாள் தொடரில் அவர் செய்த கேப்டன்சி அப்படி எதுவும் உத்வேகத்தை தந்ததாகத் தெரியவில்லை என்று இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் சிறப்பாக விளையாடி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

- Advertisement -