குஜராத் அணிக்கு எதிராக பவுண்டரி எல்லையில் ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்டை வெளிப்படுத்திய பட்லர் – வீடியோ இணைப்பு

0
596
Jos Buttler RR

நேற்று ஐ.பி.எல்-ல் 24-வது ஆட்டமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி, நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் அதிரடியான ஆட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது!

இதில் டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். சிறிய காயம் காரணமாக ராஜஸ்தான் அணியில் டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலா ஜிம்மி நீசம் இடம்பெற்றார்.

- Advertisement -

இதேபோல் குஜராத் டைட்டன்ஸ் அணியில் என்ன காரணமென்றே தெரியவில்லை, சுமாராய் ஆடிய சாய் சுதர்சனுக்குப் பதிலாய், ஆடவே செய்யாத விஜய் சங்கரை சேர்ந்திருந்தார்கள். அறிமுக வீரரா இடக்கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளை எடுத்திருந்தார்கள்.

குஜராத் அணிக்காக பேட் செய்ய வந்த ஓபனர்கள் ஏமாற்ற, விஜய் சங்கரும் வழக்கம்போல வெளியேற, ஆனால் கேப்டன் ஹர்திக்கும் அபினவ் மனோகரும் ராஜஸ்தான் பவுலர்களை புரட்டியெடுத்து விட்டனர். டிரெண்ட் போல்ட் அணியில்லாத குறை அப்பட்டமாய் தெரிந்தது.

இந்த நிலையில் ஜேம்ஸ் நீசம் வீசிய ஆட்டத்தின் 12வது ஓவரில் ஒரு பந்தை அபினவ் மனோகர் லாங் ஆன் திசையில் விரட்டி அடிக்க, அங்கு நின்றிருந்த ஜாஸ் பட்லர் அபாரமாய் தடுத்தாலும், தனக்கு அதில் சந்தேகம் இருப்பதாய் அம்பயர்களிடம் கூற, அவர்கள் அதை திருப்பி பார்த்த பொழுது, பட்லர் அதைத் தடுத்திருப்பது தெளிவாகவே தெரிந்தது.

- Advertisement -

இதைக்குறிப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இதை எல்லா வீரர்களும் பின்பற்ற வேண்டும், அவரது அணியினரும் என்று ட்வீட் செய்திருக்கிறார்.
பட்லரின் இந்த நேர்மையான செயல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது!