பின்புறமாக ஓடி ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்த ஜாஸ் பட்லர் ; 2022 ஐபிஎலின் சிறந்த கேட்ச்சாக அமிய வாய்ப்பு – வீடியோ இணைப்பு

0
553
Jos Buttler one hand catch

2022 ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமை என்பதால் 2 போட்டிகள் நடைபெறுகிறது. மாலை தொடங்கிய போட்டியில் பஞ்சாப் அணி ராஜஸ்தானை சந்திக்கிறது. இரு அணிகளும் இந்த ஆண்டு முதல் முறையாக மோதுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தார் கேப்டன் மயாங்க் அகர்வால். புதிய தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ – ஷிக்கர் தவான் களமிறங்கினர்.

ஆரம்பத்தில் இருந்தே பேர்ஸ்டோ அதிரடியாக பவுண்டரிகள் சேர்த்தார். மறுபக்கம் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். விக்கெட்டுக்கான தேடலில் தீவிரமாக இருந்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன். முதல் 6 ஓவரில் 4 பவுவர்களை மாற்றிப் பார்த்துவிட்டார். ஆனால் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இறுதியாக இவர்கள் இருவரையம் அஷ்வின் பிரித்தார். என்னதான் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்தி இருந்தாலும் அதற்கான முழு போராட்டமும் பட்லரையே சேரும்.

- Advertisement -

மிட் ஆன் பகுதியில் நின்று கொண்டிருந்த ஜாஸ் பட்லர், விரைவாக பின்புறம் ஓடி சரியான நேரத்தில் குதித்து ஒற்றைக் கையில் அந்தக் கேட்சைப் பிடித்தார். அஷ்வின் வீசிய ஆப் ஸ்பின்னை பவுண்டரி அடிக்க முயற்சித்து பட்லரிடம் பிடிபட்டார் ஷிக்கர் தவான். 16 பந்தில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். ஜாஸ் பட்லர் பிடித்த கேட்ச், 2022 ஐபிஎல் தொடரின் சிறந்தக் கேட்ச்சாக அமைய வாய்ப்புள்ளது.