இந்த வருடம் ஐ.பி.எலில் பங்கேற்க போவதில்லை என்றாலும் ஆர்ச்சரை பெரிய தொகைக்கு எடுத்துள்ள மும்பை ; அது குறித்து ஜோப்ரா ஆர்ச்சர் பேசும் வீடியோ இணைப்பு

0
1589
Jofra Archer

35 ஐபிஎல் போட்டியில் விளையாடிய 46 விக்கெட்டுகளை இதுவரை அவர் கைப்பற்றியிருக்கிறார் ஐபிஎல் தொடரில் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 21.33 மற்றும் பௌலிங் எக்கானமி 7.13 ஆகும். அதேபோல பேட்டிங்கில் 195 ரன்கள் குவித்து இருக்கிறார். பேட்டிங்கை பொறுத்த வரையில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 157.26 ஆகும்.

2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்தார். கடந்த ஆண்டு இவரை ராஜஸ்தான் அணி கைப்பற்றாத நிலையில் மெகா ஏலத்தில் தன் பெயரை முன் பதிவு செய்து இருந்தார்.

- Advertisement -

ஆனால் இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் பங்கு கொள்ள போவதில்லை என்று முன்பே கூறி இருந்தார். இஞ்சுரிக்கு பின் தற்பொழுது தன்னுடைய உடலை முன்பு போல விளையாட தயார் செய்து கொண்டு வரும் காரணத்தினால், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பங்கு கொள்ள போவதில்லை என்று விளக்கமும் அளித்து இருந்தார்.

இருப்பினும் அடுத்த ஆண்டு முதல் வழக்கம் போல தான் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதாக நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.எனவே இவரை ஏலத்தில் அணிகள் கைப்பற்றுமா இல்லை கைப்பற்றாதா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

8 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஆர்ச்சர்

இன்று அவரது பெயர் ஏலத்தில் வந்த பொழுது மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்து இவரை கைபற்றும் நோக்கத்திலேயே ஏலம் கேட்டது. ஹைதராபாத் அணி கடும் போட்டி இட்ட பொழுதிலும் இறுதியில் 8 கோடி ரூபாய்க்கு அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றியது.

- Advertisement -

பிரத்தியேகமாக ஆர்ச்சர் பேசிய வீடியோவை மும்பை அணி நிர்வாகம் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளது. அதில் “மும்பை அணியில் விளையாட நான் ஆர்வமாக இருக்கிறேன். மும்பை அணி என் இதயத்திற்கு நெருக்கமான அணி என்றும் நான் எப்போதும் மும்பை அனியிலேயே விளையாட ஆசை படுகிறேன்” என்றும் உற்சாகமாக பேசியுள்ளார்.

மும்பை அணியில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்பிரிட் பும்ரா இருக்கையில் தற்போது ஆர்ச்சரும் அந்த அணியில் இணைந்துள்ளது மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். மறுபக்கம் பும்ரா மற்றும் ஆர்ச்சர் ஒன்றாக இணைந்து விளையாட போகும் காட்சியை காண தற்போது முதலே மும்பை அணி ரசிகர்கள் மிக ஆவலுடன் தயாராகி விட்டது குறிப்பிடத்தக்கது.