எளிதான கேட்ச்சைத் தவற விட்டுவிட்டு கஷ்டமான கேட்ச்சைப் பிடித்து இங்கிலாந்து கேப்டனை வெளியேற்றிய இந்திய கேப்டன் பும்ரா – வீடியோ இணைப்பு

0
289
Jasprit Bumrah takes ben stokes catch

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. தற்போது இதில் முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாம் நகரின் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் 5 ஆம் தேதி முதல் இரு அணிகளும் மோதி வருகின்றன

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் பேட்டிங் வரிசையை ஆன்டர்சனும், இளம் வேகப்பந்து வீச்சாளர்ர் மேத்யூ போட்சும் சீர்குலைத்தனர். இதனால் இந்திய அணி 98 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

இதற்கடுத்து இணைந்த ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை மீட்டனர். ரிஷாப் 146 ரன்கள் அடித்து முதல் நாள் முடிவில் வெளியேற, ஜடேஜா இரண்டாம் நாள் துவக்கத்தில் சதமடிக்க, இந்திய அணி 416 ரன்கள் குவித்தது. இதற்கடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் துவங்க கேப்டன் பென் ஸ்டோக்சும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினார்கள். ஆரம்பத்தில் தடுமாறிய ஜானி பேர்ஸ்டோ பின்பு அதிரடியில் ஈடுபட்டு அரைசதம் அடித்தார். இந்த நிலையில் ஷமியின் ஓவரில் ஒரு பந்தை பென் ஸ்டோக்ஸ் தூக்கி அடிக்க, கவர் திசையில் நின்ற சர்துல் தாகூர் அந்த எளிமையான கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.

பின்பு சர்துல் வீசிய ஓவரின் ஒரு பந்தை மீண்டும் பென் ஸ்டோக் மிட்-ஆப் திசையில் காற்றில் அடிக்க கேப்டன் பும்ரா தவறவிட்டார். ஆனால் அடுத்த பந்தை பும்ராவிடமே சர்துல் ஓவரில் பென் ஸ்டோக்ஸ் தூக்கி அடிக்க, இந்த முறை பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக கேட்ச் செய்தார். இரண்டாவது முறையாக பும்ரா கேட்ச்பிடித்ததும் விராட் கோலியின் கொண்டாட்டம், மிகுந்த ஆக்ரோசத்தோடு வெளிப்பட்டது. களத்தில் அவர் தீ போல சுழன்று வருகிறார். இறுதியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 25 ரன்னில் வெளியேறினார்.

- Advertisement -