ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ள கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா – வீடியோ இணைப்பு

0
390
Jasprit Bumrah and Stuart Broad

இந்திய அணி கடந்த வருடம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கோவிட்டால் விளையாட முடியாது போன ஒரு டெஸ்ட் போட்டியை தற்போது பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்த முறை இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரராக சுப்மன் கில்லோடு செதேஷ்வர் புஜாரா ஆட வந்தார். ரோகித்-ராகுல் இல்லாததின் வெற்றிடம் நேற்று அப்பட்டமாய் தெரிந்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சில பவுண்டரிகள் வந்தபொழுது இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செட்டாகி விட்டதாகவே தெரிந்தது. ஆனால் அதற்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறியது. சுப்மன் கில், செதேஷ்வர் புஜாரா, ஸ்ரேயாஷ் ஐயர் மூவரையும் ஆன்டர்சன் பெவிலியன் அனுப்பினார். இளம் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ போட்ஸ் ஹனுமா விகாரி, விராட் கோலி இருவரையும் வெளியேற்ற, இந்திய அணி 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் விழுந்தது.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியைச் சரிவில் இருந்து மீட்டது. ரிஷாப் பண்ட் அற்புதமாகச் சதமடித்து 146 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா அரைசதமடித்து 83 ரன்களில் களத்தில் இருந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 300 ரன்களை கடந்த ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இன்றைய நாள் ஆட்டம் துவங்க ஸ்டூவர்ட் பிராட் தான் வீச வந்த முதல் ஓவரில் சமியை வெளியேற்றினார். இதற்கடுத்து இந்திய கேப்டன் பும்ரா ஜடேஜா உடன் இணைய, சிறப்பாக விளையாடிய ஜடேஜா சதமடித்து 104 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், கேப்டன் பும்ரா ஸ்டூவர்ட் பிராடின் ஓவரை எதிர்கொண்டார்.

- Advertisement -

இந்த ஒவரின் முதல் பந்தை பும்ரா பவுண்டரி அடித்தார், இரண்டாவது பந்து வைடா பவுண்டரி சென்றது. மூன்றாவது பந்து நோபாலாக சிக்ஸர் பறந்தது. அடுத்த பந்து மீண்டும் பவுண்டரி, அடுத்து மீண்டும் சிக்ஸர், அடுத்து பவுண்டரி, சிங்கிள் என மொத்தமாய் 35 ரன்கள் வந்தது. இதில் பும்ரா மட்டும் 29 ரன்கள் அடித்திருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு அதிகம் ரன் தரப்பட்ட ஓவர் ஸ்டூவர்ட் பிராட் வீசிய இந்த ஓவர்தான். அதேபோல் டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவருக்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னும், தற்போது பும்ரா அடித்த 29 ரன்கள்தான். இதற்குமுன் லாரா, பெய்லி, ரூட் ஆகியோர் 28 ரன்களை அடித்திருந்ததே சாதனையாக இருந்தது!

- Advertisement -