விக்கெட் வீழ்த்திய பிறகு கொரோனா பாதுகாப்பு முறைகளை செய்துக் காட்டியே ஹாரிஸ் ரவுஃப் – வீடியோ இணைப்பு

0
91
Haris Rauf Covid Celebration

ஆஸ்திரேலியாவில் தற்போது ஆஷஸ் தொடர் நடந்து வந்தாலும் அது கூடவே பிக் பேஷ் லீக் தொடர் நடந்து வருகிறது. வரிசையாக பல வீரர்களுக்கு கொரோனா பாதிப்புகள் வந்தாலும் தொடர் நல்ல முறையில் நடந்து வருகிறது. இன்று பெர்த் மற்றும் மெல்போன் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெர்த் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பெர்த் அணிக்கு துவக்க வீரர்களாக பேட்டர்சன் மற்றும் ஹாப்ஸன் ஆகியோர் களமிறங்கினர். வெல்வோம் அணி தரவரிசையில் ஏழாவது இடத்தில் இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியமான சூழ்நிலையில் களமிறங்கியுள்ளது.

மெல்போர்ன் அணிக்காக தற்போது பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப் விளையாடி வருகிறார். பாகிஸ்தான் அணிக்காக அதிவேகமாக பந்துவீசிய மிகவும் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து தருவதில் வல்லவர் இவர். இவருடைய அதிவேகப் பந்து வீச்சை காரணமாகக் கொண்டு மெல்போர்ன் அணி வரை ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை இவர் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை சந்தித்த பெர்த் அணியின் பேட்டர்சன் எட்ஜ் மூலம் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் ஆட்டத்தின் முதல் விக்கெட்டை கொண்டாட மெல்போன் அணியினர் கூடினர். அப்போது வித்தியாசமான ஒரு கொண்டாட்டத்தை ஹாரிஸ் வெளிப்படுத்தினார்.

- Advertisement -

கொரோனா காலத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நடைமுறைகளை வெளிப்படுத்தும் விதமாக அந்த கொண்டாட்டம் அமைந்தது. சானிடைசர் வைத்து கைகளை சுத்தம் செய்வது போல முதலில் சைகை செய்தார் ஹாரிஸ். அதன் பிறகு தன்னுடைய கையிலிருந்த முக கவசத்தை எடுத்து முகத்தில் அணிந்து கொண்டு சக வீரர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். வரிசையாக ஆஸ்திரேலியா நடைபெறும் பிக் பேஷ் தொடரில் வீரர்கள் எல்லாம் கொரோனா பாதிப்பால் அவதியுறுவதால் ஒரு முன்னணி வீரர் இவ்வாறு செய்வது அதிக விழிப்புணர்வை மக்கள் மத்தியில் நிச்சயமாக ஏற்படுத்தும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.