ஒரு சில மாதங்களுக்கு முன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ அணியை விட்டு வெளியேற்றியது. அடுத்ததாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியும் இவரை விடுவித்தது. அதன் பின்னர் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பதவியேற்றப் பின் பொறுப்பாக ஆடி மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்தார்.
இந்த ஆண்டின் துவக்கம் முதல் இன்று வரை ஹர்திக் பாண்டியாவுக்கு சிறப்பாக அமைத்துள்ளது. ஜனவரி மாதம் குஜராத் அணியின் கேப்டன் ஆனார். இரண்டு மாதங்கள் கழித்து அந்த அணிக்காக முதல் முறை கோப்பையை வென்றார். பேட்டிங்கிலும் டாப் ஆர்டரில் சென்று அணிக்கு தேவையான ரன்கள் சேர்த்தார். அதோடு இந்திய அணியிலும் கம்பேக் கொடுத்தார். தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டி20ஐ தொடரின் முதல் ஆட்டத்தில் தரமான ஆல்ரவுண்டர் செயல்திறனை வெளிக்காட்டி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
டி20 தொடரை கைப்பற்றும் நோக்கில் இந்திய அணி 2வது டி20ஐ ஆட்டத்தில் களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 171 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தொடரை இழந்தது. இந்தப் போட்டியின் இரண்டாவது பாதியில் நடந்த ஓர் சர்ச்சைக்குரிய விஷயம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்துவீசும் போது கேப்டன் ரோஹித் ஷர்மாவை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். அவர் பவுலிங் போடும் போது ஃபீல்டர்களை நோக்கி, “ அந்த *** பேசுவதைக் கேட்காதீர்கள். நான் சொல்வதை கவனியுங்கள். ” எனக் கூறியுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஹர்திக் பாண்டியாவின் இந்தச் செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
#HardikAbusedRohit : Just by winning one ipl trophy hardik pandya is abusing the man who is five times winner in ipl and playing for india since 2007 and by the way he has shown this before with his another senior shami . pic.twitter.com/0zRnYnINwA
— ishwar dutta (@editor_Ishwar) July 10, 2022
ஏற்கனவே ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்ட போது மூத்த வீரர் மொஹமத் ஷமியிடம் கோபப்பட்டு கடிந்தார். அப்போதும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டித்தனர். தற்போது மீண்டும் அவர் இது போல் நடந்து கொண்டதால் ரசிகர்கள் இடையே ஹர்திக் பாண்டியாவிற்கு இருக்கும் மரியாதை குறைந்து கொண்டு வருகிறது. ரோஹித் ஷர்மாவை தப்பாக பேசியது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.