பின்புறமாக ஓடிச்சென்று ஒற்றைக் கையால் பிடிக்கப்பட்ட கேட்ச் ; மேக்ஸ்வெல்லால் கூட நம்ப முடியவில்லை – வீடியோ இணைப்பு

0
176
Glenn Maxwell One handed Catch BBL

ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பேஷ் தொடர் நடந்து கொண்டு வருகிறது. பல்வேறு வீரர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டாலும், தொடர்ந்து இந்த தொடர் சிறப்பாக நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் ஆகிய அணிகள் மோதின. இரண்டு அணிகளிலும் மேக்ஸ்வெல் மற்றும் லின் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்ததால் இந்த ஆட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. மேலும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு மீண்டும் கிரிக்கெட் ஆட வந்துள்ளதால், அவரது ஆட்டத்தையும் காண ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்தனர்.

முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் அணி 149 ரன்கள் எடுத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியின் கேப்டன் லின் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பென் டக்கெட் 51 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் 16வது ஓவரை கூல்டர் நைல் வீசினார். அந்தப் பந்தை பிரிஸ்பேன் அணி வீரர் ஹீஸ்லெட் தூக்கி அடித்தார். பந்து லாங் ஆன் பக்கம் சென்றதுமே அது பவுண்டரி என்று பலரும் நினைத்தனர்.

- Advertisement -

ஆனால் பந்து தனது தலைக்கு மேல் செல்வதை உணர்ந்த மெல்போர்ன் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் மிட் ஆன் திசையிலிருந்து பின்னோக்கி ஓடினார். பின் பக்கமாக ஓடிச் சென்று அற்புதமாக ஒரு கையை மட்டுமே பயன்படுத்தி அந்த கேட்சை சிறப்பாக பிடித்தார் மேக்ஸ்வெல். கடைசி 5 ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்கலாம் என்று நினைத்திருந்த பிரிஸ்பேன் அணியின் கனவை இந்த ஒரே கேட்ச் மூலமாக மேக்ஸ்வெல் தகர்த்து விட்டார்.

பீல்டிங்கில் மட்டும் இல்லாமல், பந்து வீச்சிலும் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினார். தன்னுடைய சுழற்பந்து வீச்சு மூலம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் மேக்ஸ்வெல். மேலும் பேட்டிங்கிலும் 30 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இவரின் இந்த சிறப்பான ஆட்டத்தால் மெல்போன் அணி எளிதாக வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதையும் மேக்ஸ்வெல் தட்டிச் சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் மெல்போர்ன் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்னமும் இந்த அணிக்கு ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் நான்காவது இடத்திற்கு முன்னேறி அடுத்த சுற்றுக்கு செல்ல கடுமையாக முயற்சித்து வருகிறது.

- Advertisement -