பிக் பேஷ் லீகில் மேக்ஸ்வெல் அதிரடி சதம் ; ஆனால் எந்த பயனும் இல்லை – ஹைலைட்ஸ் வீடியோ இணைப்பு

0
207
Glenn Maxwell BBL Century

2021-22 பிக் பேஷ் டி20 தொடரின் லீக் சுற்று தற்போது பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது. அனைத்து அணிகளும் 3 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் கூடுதலாக 4 போட்டிகளில் விளையாடியுள்ளன.

சதமடித்து அசத்திய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் மேக்ஸ்வெல்

மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்கள் அணிகளுக்கு இடையிலான 2-வது லீக் சுற்றுப் போட்டி சில நிமிடங்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலில் பந்து வீசியது.
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் முதல் இரண்டு போட்டிகளில் நன்றாக விளையாடாத நிலையில், கடந்த போட்டியிலும் தற்போது நடைபெற்ற முடிந்த போட்டியிலும் மிக அற்புதமாக விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக தற்போது நடந்து முடிந்த போட்டியில் 54 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.57 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 180.7 ஸ்ட்ரைக் ரேட் விதத்தில் 103 ரன்கள் குவித்து தனது அணியை இன்று தாங்கிப் பிடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய அதிரடியான பேட்டிங் காரணமாக மெல்போர்ன் ஸ்டார்ஸ் இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது.

ஜோஷ் ஃபிலிப்பீ துணையோடு கடைசிப் ஓவரில் வெற்றி பெற்ற சிட்னி சிக்ஸர்ஸ்

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய சிட்னி அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. ஆனால் ஒரு பக்கம் அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஜோஷ் ஃபிலிப்பீ இறுதிவரை நிதானமாக நின்று அந்த அணியை கடைசி ஓவரில் வெற்றி பெறச் செய்துள்ளார். 61 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என 99 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் தனது அணியை அவர் வெற்றி பெறச் செய்துள்ளார்.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக முதல் போட்டியிலும் சரி தற்போது நடந்து முடிந்த இரண்டாவது போட்டியிலும் சரி, இந்த இரண்டு போட்டியின் ஆட்ட நாயகன் விருதை ஜோஷ் ஃபிலிப்பீ கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சிட்னி சிக்ஸர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் மூன்றாவது இடத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும் 4வது இடத்தில் அடிலைட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -