ஷேன் வார்னேவின் இழப்பு குறித்து பேசிய பொழுது தன்னை கட்டுபடுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுத ரிக்கி பாண்டிங் – வீடியோ இணைப்பு

0
2580
Ricky Ponting Crying

1992 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் சுமார் 15 வருடகாலம் ஆஸ்திரேலிய அணியில் லெக் ஸ்பின் பந்துவீச்சில் தனிக்கென தனி ராஜங்கத்தை அமைத்து கொண்டவர் ஷேன் வார்னே.டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள், ஐந்து முறை ஆஷஸ் வெற்றி, ஒரு முறை உலகக் கோப்பை வெற்றி, முதல் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய கேப்டன் என்கிற பல பெருமைக்கு ஷேன் வார்னே சொந்தக்காரர் ஆவார்.

லெக் ஸ்பின் பந்து வீச்சில் அனைத்து இளம் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு முன்னோடியாக இன்றுவரை ஷேன் வார்னே திகழ்ந்து வருகிறார். லெஜன்ட் கிரிக்கெட் வீரராக வலம் வந்து கொண்டிருந்த அவர் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்தார்.

- Advertisement -

அவரது இழப்பை இப்போதும் அவரது ரசிகர்களால் நம்ப முடியவில்லை. ரசிகர்கள் மட்டுமின்றி அவரது சமகால கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தற்பொழுதைய முன்னணி கிரிக்கெட் வீரகள் கூட அவரது இழப்பை இன்னும் நம்பவில்லை என்பதே உண்மை.

கண்ணீர் விட்டு தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த ரிக்கி பாண்டிங்

1990களில் ரிக்கி பாண்டிங்குடன் இணைந்து விளையாடிய ஷேன் வார்னே பின்னர் 2002 முதல் 2007 வரையில் அவரது தலைமையிலும் விளையாடினார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக காணப்பட்டனர். ஷேன் வார்னேவின் இழப்பை தாங்கி கொள்ள முடியாத ரிக்கி பாண்டிங் கண்ணீர் விட்டு அழுதவாறு அவர் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

“முதலில் அவருடைய கிரிக்கெட் விளையாட்டில் ஒரு பேரிழப்பாக நான் பார்க்கிறேன். அவர் ஒரு சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன், அனைத்து கால கட்டத்துக்கும் ஏற்ற தலை சிறந்த பந்து வீச்சாளர் அவர் என்று தன் அழுகையை கட்டு படுத்த முடியாமல் கண்ணீர் மல்க ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

- Advertisement -

மார்ச் 4ஆம் தேதி ஷேன் வார்னே உயிர் இழந்தார். அதற்கு முந்தைய நாள் நான் சற்று சீக்கிரமாக உறங்க சென்றேன். மறுநாள் எனது பிள்ளைகளை விளையாட அழைத்து செல்வதற்காக நான் சீக்கிரமாக உறங்க சென்றேன். மறுநாள் காலை எழுந்ததும் வார்னே இறந்த செய்தியை அறிந்தேன்.முதலில் என்னால் அதை நம்ப முடியவில்லை.அதை நம்ப எனக்கு சில மணி நேரங்கள் ஆனது.

கிரிக்கெட் அகாடமியில் 15 வயதில் நான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். அவர் தான் எனக்கு புனைப்பெயரைக் (பண்ட்டர்) கொடுத்தார். நாங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒன்றாக விளையாடி இருக்கிறோம். அவரோடும், அவருக்கு பின்னர் நிறைய பந்து வீச்சாளர்களுடன் நான் விளையாடி இருக்கிறேன். என்னிடம் நான் விளையாடிய வீச்சாளர்களுல் தலைசிறந்த வீச்சாளர் யார் என்று கேட்டால் என் பதில் வார்னே தான்.

லெக் ஸ்பின் வீச்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற பெருமை அவருக்கு உள்ளது.அவரை பார்த்து லெக் ஸ்பின் பந்து வீச்சில் சாதிக்க நினைத்த இளம் வீரர்கள் ஏராளம்.அவரது ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிராதிக்கிறேன்.அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறி முடித்தார்