வீடியோ: சிஎஸ்கே பெஸ்ட்டா? மும்பை இந்தியன்ஸ் பெஸ்ட்டா?… பொல்லார்ட், பிராவோ.. யார் பெஸ்ட் டி20 பிளேயர்? – காருக்குள் சண்டை போட்டுக்கொண்ட ஜாம்பவான்கள்! – கலகல வீடியோ உள்ளே

0
1468

மும்பை இந்தியன்ஸ் சிஎஸ்கே இரண்டில இந்த அணி வெற்றிகரமான அணி? பொல்லார்ட் பிராவோ இருவரில் யார் பெஸ்ட் டி20 பிளேயர்? காருக்குள் இருவரும் சண்டை போட்டதை விடியோவாக வெளியிட்டுள்ளார் பிராவோ.

கீரன் பொல்லார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2010 முதல் விளையாடி வந்தார். இந்த சீசன் துவங்குவதற்கு முன்பாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக புதிய பணியை ஏற்று செயல்பட்டார்.

- Advertisement -

அதேபோல் சிஎஸ்கே அணியுடன் பிளேயராக 2011ஆம் ஆண்டு முதல் பயணித்து வந்த பிராவோ, நடந்து முடிந்த ஐபிஎல் சீசனுக்கு முன்பு ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்து சிஎஸ்கே அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

இந்த வருட ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடம்பிடித்து வெளியேறியது. சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது.

தற்போது ரசிகர்கள் மத்தியில் சிஎஸ்கே அணி வெற்றிகரமானதா? மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகரமானதா? என்கிற வாக்குவாதங்கள், விவாதங்கள் நிலவி வருகின்றன. இந்த விவாதம் தற்போது பிராவோ மற்றும் பொல்லார்ட் வரை சென்றிருக்கிறது.

- Advertisement -

இவர்கள் இருவரும் காருக்குள் அமர்ந்து எந்த அணி பெஸ்ட்? இருவரில் யார் பெஸ்ட் டி20 பிளேயர்? என விவாதித்ததை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டிவைன் பிராவோ.

இருவரும் அந்த வீடியோவில் பேசியதாவது:

பிராவோ: “சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று ஐபிஎல் சிறந்த அணியாக இருந்து வருகிறது.”

பொல்லார்ட்: “எந்த வகையில் சிஎஸ்கே அணி பெஸ்ட்? மும்பை இந்தியன்ஸ் அணி தான் பெஸ்ட். நாங்கள் மூன்று வருடங்களுக்கு முன்பே 5 கோப்பைகளை வென்றுவிட்டோம். இந்த சீசன் ஐந்தாவது கோப்பையை வென்றது எப்படி இருக்கிறது?

பிராவோ: “சரி.. யார் பெஸ்ட் டி20 வீரர்? நான் தான் பெஸ்ட். என்னிடம் தற்போது 17 டி20 கோப்பைகள் இருக்கின்றது. உன்னிடம் எத்தனை இருக்கின்றது?

பொல்லார்ட்: “நான் இன்னும் எண்ணிப்பார்க்கவில்லை.

பிராவோ: “(சிரித்தபடியே) நான் கூறுகிறேன். உன்னிடம் 15 கோப்பைகள் இருக்கின்றது. 17 கோப்பைகள் வைத்திருக்கும் நான் தான் பெஸ்ட்.”

மேலும் பிராவோ: “நான் பிளேயரா மட்டுமில்லை, பயிற்சியளராகவும் கோப்பை வென்றுள்ளேன். ஆனால் நீ (சிரித்தார்).”

பொல்லார்ட்: “நீ என்னை விட அதிக வருடம் கிரிக்கெட் ஆடியிருக்க… எனக்கும் இன்னும் கொஞ்சம் வருஷம் கொடு, வெற்றி பெற்றுக் காட்டுகிறேன்.”

மும்பை, சிஎஸ்கே இரு அணிகளின் ஜாம்பவான்களும் பேசியதை காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டது, சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியில் ஒரு வகையில் நெருக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.