முதல் 16 பந்தில் 9 ரன்கள் ; கடைசி 5 பந்தில் 21 ரன்கள் விளாசி அதிரடி பினிஷ் செய்த தினேஷ் கார்த்திக் – வீடியோ இணைப்பு

0
454
Dinesh Karthik

ஐ.பி.எல் தொடர் முடிந்து, இந்தியா வந்திருக்கும் தென் ஆப்பிரிக்க அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. டெல்லி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோற்று இருந்தது!

இந்தத் தொடர் இந்திய அணி வீரர்களுக்கு மட்டும் அல்லாமல், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் முக்கியமான தொடராக அமைந்திருக்கிறது. காரணம், இந்திய அணி கடந்த ஆண்டு யு.ஏ.இ-ல் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது.

- Advertisement -

மேலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடங்க இருக்கிறது. இதற்காக டி20 கிரிக்கெட் வடிவத்திற்குச் சரியான ஒரு அணியை உருவாக்கும் நெருக்கடி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், தேர்வாளருக்கும், அணி நிர்வாகத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் ரோகித் ஷர்மா, விராட் கோலி, மொகம்மத் ஷமி, ஜஸ்ப்ரீட் பும்ரா இவர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, கே.எல்.ராகுல் தலைமையில் ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக்கிற்கு மறுவாய்ப்பும், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகியவர்களுக்கு முதல் வாய்ப்பும் கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணிக்காக பேட்டிங்கில் பினிசிங் ரோலில் தினேஷ் கார்த்திக் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு இருந்தார். இந்திய அணியிலும் தற்போது பினிசிங் ரோலே தரப்பட்டுள்ளது. முதல் போட்டியில் விளையாட இரண்டு பந்துகளே வாய்ப்பு கிடைத்தது. இதில் ஒரு ரன்னை அடித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய இரண்டாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து, முக்கியமான விக்கெட்டுகளை 14 ஓவர்களுக்குள் விழுந்து விட, அணியைச் கரைசேர்க்கும் பொறுப்பு தினேஷ் கார்த்திக் மேல் விழுந்தது.

இந்த நிலையில் ஆரம்பத்தில் மிகக் கவனமாக விளையாடினார். முதலில் 16 பந்துகளைச் சந்தித்த அவர் 9 ரன்களே அடித்தார். 17வது பந்தில்தான் முதல் பவுண்டரியே வந்தது. 18 வது பந்திலும் பவுண்டரி அடித்தார். அடுத்து தான் விளையாடிய 19வது மற்றும் 20வது பந்தில் சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தினார். 21வது பந்தில் சிங்கிள் ஆட, இருபது ஓவர் முடிவுக்கு வந்தது. கடைசி ஐந்து மட்டும் 21 ரன்களை அடித்து, தன் பினிசிங் திறமையைக் காட்டியதோடு, அணியையும் 148 ரன்களுக்கு கொண்டு வந்துள்ளார்!