பறவை போல பறந்து வந்து கேட்ச் பிடித்த நியூசிலாந்து வீரர் – ரசிகர்கள் ஆச்சரியம்

0
174
Devon Conway Catch

டி20 உலக கோப்பை தொடர் தற்போது அமீரக நாட்டில் உள்ள மைதானங்களில் நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. ஏற்கனவே சில மாதங்கள் முன்பு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்து சுற்றுப்பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பியது. அதற்கு பழிதீர்க்கும் வண்ணமாக பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்டத்தை எதிர்கொண்டது. ஏற்கனவே இந்திய அணியை வீழ்த்தி இருந்ததால் நியூசிலாந்து அணியையும் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பாகிஸ்தான் அணியின் துள்ளிய பந்துவீச்சால் நியூசிலாந்து அணி ரன் சேர்க்க திணறியது. கான்வே 27 ரன்களும் கேப்டன் வில்லியம்சன் இருபத்தி ஐந்து ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியால் மொத்தமே 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. கேப்டன் பாபர் சவுதியின் பந்து வீச்சில் பவுல்டு முறையில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதன் பிறகு வந்த வீரர்களும் மந்தமான நிலையில் ரன் சேர்க்க அனுபவ வீரர் ஹபீஸ் களத்துக்குள் வந்தார். தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடித்து ஆட்டத்தை துவக்கிய முகமது ஹபீஸ் அதிரடியாக விளையாட போவதை நன்கு உணர்த்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்த ஓவரிலும் நேராக சிக்ஸர் அடிக்க முயன்றார் ஹபீஸ். அந்த இடத்தில் எந்த ஒரு பீல்டரும் இல்லை என்பது போல் தோன்றினாலும் திடீரென்று கான்வே பறந்துவந்து சிறப்பாக கேட்ச் பிடித்து ஹபீசை வெளியேற்றினார்.

தனக்கு இடது பக்கம் அதிக தூரம் ஓடி வந்து பந்து சரியாக தரையில் படும் நேரத்தில் பறந்து வந்து இரண்டு கைகளாலும் கேட்சை விடாமல் பிடித்து அபாயகரமான அனுபவ வீரர் முகமது ஹபீஸை வெளியேற்றினார் டெவான் கான்வே. ஒரு வானூர்தி வானத்தில் பறப்பது போன்று இந்த கேட்ச் பிடித்தார் கான்வே. இப்படி ஒரு சிறப்பான கேட்சை பார்த்ததும் அதை ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். ஹபீஸ் ஆட்டம் இழந்தாலும் அதன்பின்பு ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் சோயப் மாலிக் மற்றும் அதிரடி வீரர் அசிப் அலி இணைந்து பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.