பாகிஸ்தான் டெஸ்டில் ஆட்டத்துக்கு நடுவே நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்த டேவிட் வார்னர் – வீடியோ இணைப்பு

0
263
David Warner Dancing in Field

ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாதுகாப்பு காரணங்களாக நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த பாகிஸ்தான் நாடு தற்போது சிறிது சிறிதாக மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டை தனது நாட்டிற்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதன் நீட்சியாக ஆஸ்திரேலிய அணி தற்போது 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட முறையான கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் நாட்டில் விளையாடி வருகிறது. சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்று டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

கடந்த 4ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பல ஆண்டுகளுக்கு பின்பு டெஸ்ட் தொடர் நடைபெற இருப்பதால் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைப்பாக இருக்கும் என்று பலரும் கருதினர். ஆனால் மைதானம் அப்படியில்லாமல் பந்து வீச்சுக்கு சுத்தமாக உதவாமல் இருந்தது. இதைப் பயன்படுத்திய பாகிஸ்தான் அணி மிகவும் சிறப்பாக விளையாடி 476 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் இமாம்-உல்-ஹக் மற்றும் அசார் அலி இருவரும் சதம் கடந்து அசத்தினர். இரண்டு நாட்கள் முழுவதும் பாகிஸ்தான் அணி பேட்டிங் பிடித்தது. இரண்டு நாட்கள் சென்ற பின்பு மைதானத்தின் பெரிய மாற்றம் எதுவும் இல்லாததால் ஆஸ்திரேலிய அணியும் சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் யாரும் சதமடிக்காவிட்டாலும் அந்த அணியின் கவாஜா வார்னர் ஸ்மித் மற்றும் லபுஷேன் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். ஆஸ்திரேலிய இறுதியாக 459 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

தற்போது ஐந்தாம் நாளிலும் தேநீர் இடைவேளை வரையிலும் பாகிஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 199 ரன்கள் எடுத்துள்ளது. ஆட்டம் எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லாமல் மந்தமாக சென்று கொண்டே இருப்பதால், ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றத்தில் இருந்தனர். இதன் காரணமாக ரசிகர்களை சற்று குஷிப்படுத்தும் விதத்தில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் சிறிது நேரம் களத்தில் நடனமாடினார். ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் இது போன்ற நடனங்களை ஆடி பதிவிடும் வார்னர் தற்போது பாகிஸ்தான் நாட்டில் ரசிகர்கள் முன்னிலையில் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.