தாமதித்து நடந்த சஹாலை வேகமாக ஓட சொல்லி கலாய்த்த ரோஹித் ஷர்மா ; தந்திரமாக ஃபீல்ட் செட் செய்து விக்கெட் வீழ்த்திய கேப்டன் – வீடியோ இணைப்பு

0
2630
Rohit Sharma Field Setup

இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி சற்று முன்பு நடந்து முடிந்தது. போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 64 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக கேஎல் ராகுல் 49 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி 46 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களுடன் இந்திய அணியிடம் சரணடைந்தது. அந்த அணியில் ஷமார் ப்ரூக்ஸ் மட்டும் அதிகபட்சமாக 44 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் மிக சிறப்பாக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் கைகொடுத்தார். ஆட்டநாயகன் விருதை அவர் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்திய அணி தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியில் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், ஆட்டத்தின் இறுதி நேரத்தில் ரோஹித் ஷர்மா சஹாலை திட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அனைவர் முன்னிலையிலும் திட்டு வாங்கிய சஹால்

44 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் 45ஆவது ஓவரை வீச வந்தார். அணியின் கேப்டன் ரோஹித் வீரர்களை சரியாக நிற்க வைத்துக் கொண்டிருந்தார்.

இந்திய அணி வெற்றி பெற இரண்டு விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது. வீரர்களை சரியான இடத்தில் நிற்க வைத்துக்கொண்டிருந்த ரோஹித் சஹாலை லா ஆஃப் திசை பக்கம் போகச் சொன்னார். சஹாலும் சற்று மெதுவாக அந்த திசை பக்கம் செல்ல, அதைக்கண்ட ரோஹித் கோபத்திற்கு ஆளானார்.

- Advertisement -

“உனக்கு என்ன ஆயிற்று ஏன் இப்படி மெதுவாக நடந்து கொண்டு இருக்கிறாய், வேகமாக லாங் ஆஃப் திசை பக்கம் ஓடுமாறு” சஹாலை சற்று கோபத்துடன் ரோஹித் ஷர்மா வலியுறுத்தினார். போட்டியை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பதற்காக ரோஹித் ஷர்மா அவ்வாறு வலியுறுத்தியது பின்னர் தெரியவந்தது.

சஹாலிடம் ரோஹித் ஷர்மா உரையாடிய அந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.