வீடியோ: ஸ்டாய்னிஸ்-தீபக் ஹூடா குளறுபடி… பலியான ஸ்டாய்னிஸ்! – மும்பையின் வெற்றிக்கு ஆரம்பம் இங்கே தான்!

0
1046

ரன் ஓடும்போது முட்டி மோதிக்கொண்ட ஹூடா-ஸ்டாய்னிஸ். தவறான நேரத்தில் ரன்அவுட் ஆன ஸ்டாய்னிஸ். இதன் விடியோவை கீழே காணலாம்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

- Advertisement -

கேமரூன் கிரீன் 41 ரன்கள், சூரியகுமார் யாதவ் 33 ரன்கள், திலக் வர்மா 26 ரன்கள் மற்றும் நேஹல் வதேரா 23 ரன்கள் என பேட்டிங்கில் ஆங்காங்கே நல்ல பங்களிப்பு கொடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இலக்கை துரத்த களமிறங்கிய லக்னோ அணிக்கு மேயர்ஸ்(18), மான்கட்(8) இருவரும் ஓபனிங் இறங்கி சொற்பரன்களுக்கு அவுட்டாகி மோசமான துவக்கம் கொடுத்தனர். அடுத்துவந்த க்ருனால் பாண்டியா(8) விக்கெட்டை பியூஸ் சாவ்லா தூக்கினார்.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருத்தர் மட்டுமே நின்று லக்னோ அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வந்தார். நன்றாக விளையாடி வந்த ஸ்டாய்னிஸ், ரன் ஓடும்போது தீபக் ஹூடா மீது மோதி தடுமாறி ரன் அவுட் ஆகினார். இது மிகப்பெரிய ஏமாற்றத்தை லக்னோ அணிக்கும், திருப்பு முனையை மும்பை அணிக்கும் கொடுத்தது.

- Advertisement -

முக்கியமான நேரத்தில் ஸ்டாய்னிஸ் 40 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்ததாக கிருஷ்ணப்பா கவுதம், தீபக் ஹூடா இருவருமே காமெடியாக தவறுகள் செய்து ரன் அவுட் ஆகினர்.

16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு லக்னோ அணி ஆல் அவுட் ஆனது. 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து தொடரை விட்டு வெளியேறியது.

ஸ்டாய்னிஸ்-தீபக் ஹூடா குளறுபடி மற்றும் ரன்அவுட் விடியோ: