பிளே-ஆப் வந்ததே அதிஷ்டம்; பைனலுக்கு போற மாதிரியான டீம் சிஎஸ்கே கிடையாது – பிரச்சினைகளை எடுத்து சொன்ன வாசிம் ஜாபர்!

0
9322

சிஎஸ்கே அணியில் பல சிக்கல்கள் இருக்கின்றது. இது பேலன்ஸ் ஆன டீம் கிடையாது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் வாஷிம் ஜாபர்.

2023 ஐபிஎல் பிளே-ஆப் சுற்றில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிய முதல் குவாலிபயர் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. லக்னோவை வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்று பைனலுக்குள் சென்றது.

- Advertisement -

சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையை கோப்பையை வெல்வதற்கு காத்திருக்கின்றது.

இரு அணிகள் குறித்தும் பல்வேறு கணிப்புகள் மற்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பைனலில் எந்த அணி வெற்றி பெறும்? இவர்கள் பைனலுக்கு வந்ததற்கு என்னென்ன காரணம்? ஆகிய குறித்த விவாதங்களும் நடைபெற்றன.

சிஎஸ்கே அணி பைனலில் விளையாடுவது குறித்து தனது சமீபத்திய பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் துவக்க வீரர் வாஷிம் ஜாபர். அவர் பேசியாதவது:

- Advertisement -

“சிஎஸ்கே பைனலுக்கு வந்ததற்கு முழு முக்கிய காரணம் தோனி. அவருடைய கேப்டன்ஷிப் பொறுப்பு மற்றும் பிளான் இரண்டும் நன்றாக கை கொடுத்திருக்கிறது. மேலும் அணியில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யவில்லை. தொடர்ச்சியாக ஒரு பிளேயிங் லெவனை எடுத்துச் சென்று செய்து காட்டியுள்ளார்.

துவக்கத்தில் சிஎஸ்கே அணியில்ல் பந்துவீச்சு சற்று மோசமாகவே இருந்தது. இப்படிப்பட்ட பந்துவீச்சை வைத்துக்கொண்டு பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதே கடினம் என எண்ணினேன். அவை அனைத்தையும் பொய்யாக்கி விட்டு இப்போது பைனலில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் மகேந்திர சிங் தோனியின் மேஜிக்.

பைனலில் மோதும் இரண்டு அணிகளையும் ஒப்பிடுகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி சுழல் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் கூடுதல் சிறப்பாக இருக்கிறது. முதல் வாலிபர் போட்டியில குஜராத் அணி தோல்வியுற்றதுக்கு காரணம் சரியான இடத்தில் வீரர்களை பயன்படுத்தவில்லை. அதீத நம்பிக்கையுடன் களமிறங்கி விட்டார்கள். அதனால் அவர்கள் திட்டம் சரியாக எடுபடவில்லை. ஹர்திக் பாண்டியா பேட்டிங் இறங்கிய இடம் மற்றும் சாய் சுதர்சன் விளையாட வைக்கப்படாதது என பல்வேறு தவறுகளை செய்தனர்.” என்றும் குறிப்பிட்டார்