முதல் டெஸ்ட் ; திரைப்பட நடிகர்களுடன் ஒப்பிட்டு புதிரான இந்திய அணியின் ப்ளேயிங் லெவனை அறிவித்த வாசிம் ஜாபர்

0
688
Wasim Jaffer Test

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி நாட்டிங்காமில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது இந்திய அணியின் ப்ளேயிங் லெவனை திரைப்பட நடிகர்கள் புகைப்படத்துடன் ஒப்பிட்டு சூசகமுறையில் வெளியிட்டுள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர்.

கடந்த ஓராண்டு காலமாக தான் கிரிக்கெட் வீரர் பயிற்சியாளர் என்பதை மறந்து சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டராகவே வாழ்ந்துகொண்டிருப்பவர் வாசிம் ஜாபர். இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் கிரிக்கெட் சம்பந்தப்பட்டு வெளியிடும் சர்ச்சையான செய்திகளுக்கு தனது காமெடி ஸ்டையிலில் பதிலடி கொடுப்பதில் இவர் ஒரு லெஜெண்ட்.இவருக்கு முன்னதாக மோர்கன் வெளியிடும் கருத்துகளுக்கு வீரேந்தர் சேவாக் அடிக்கும் கருத்து திரும்ப இவரிடம் கேள்வி கேட்காத வகையில் வச்சு செய்துவிடுவார்.

- Advertisement -

இவர்களது இத்தகைய செயல் இணைய வாசிகளிடம் அமோக வரவேற்ப்பை பெற்றதன் பின் கிரிக்கெட் பற்றியும் , ப்ளேயிங் லெவனை பற்றியும் சில புதிரான போஸ்ட்களை பதிவிடுவார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டுக்கு தனது இந்திய அணியின் விளையாடும் லெவனைத் தேர்ந்தெடுத்தார். கிரிக்கெட் வீரர்களை பற்றி கூறாமல் அவர்களுடைய குணாதிசயங்கள் கொண்ட நடிகர் அல்லது நடிகர் நடித்த படத்தின் கதாப்பாத்திரத்தின் பெயருடன் ஒப்பிட்டு ரசிகர்களை கண்டுபிடிக்கும் வகையில் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியியையும் காயத்தையும் பிரிக்கமுடியாத ஒன்றாகவே இருக்கிறது. ஆஸ்திரேலிய தொடரின் போது காயம் காரணமாக பல முன்னனி வீரர்கள் விளையாடமல் போனது. ஆஸ்திரேலியாவிலாவது போட்டி நடக்கும் போது காயம் ஏற்ப்பட்டது . இந்த சுற்றுப்பயணத்தில் போட்டி தொடங்கும் முன்பே காயம் என அவேஷ் கான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் தொடரிலிருந்தும் மாயங்க் அகர்வால் முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகியுள்ளனர்.

இந்திய அணியின் பிளேயிங் லெவன்

அகர்வால் இல்லாத நிலையில் அவருக்கு பதில் ஷாருக் கானின் படத்தை சுட்டிக்காடி கே.எல். ராகுலை தொடக்க வீரராக தேர்வுசெய்துள்ளார். மற்றொரு தொடக்கவீரராக ரித்திக் ரோஷனின் முதல் படத்தினை ஒப்பிட்டு ரோஹித் சர்மாவைத் தேர்ந்தெடுத்துள்ளார். துருக்கி மொழி நடிகர் கேவிட் செடின் கோனரின் படத்தை ஒப்பிட்டு கேப்டன் விராட் கோலியையும் ஜான் அப்ரஹாம் புகைப்படத்தினை பயன்படுத்தி துணைக்கேப்டன் அஜிங்கிய ரஹானேவையும் தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

ஸ்டீவ் என்ற செல்லப்பெயர் கொண்ட புஜாராவிற்க்கு ஸ்டீவ் புகைப்படம் , சோரப் புகைப்படத்தை ரிஷப் பண்டிற்க்கும் , பூம்ராங் திரைப்படத்தின் போஸ்டருடன் பும்ராவிற்க்கும் , முகமது அலி புகைப்படத்தை மொகமத் ஷமிவிற்க்கும் , ரன்வீர்சிங் புகைப்படத்தை இஷாந்த் ஷர்மாவிற்க்கும் , ரவிசாஸ்திரியின் புகைப்படத்தை ரவீர்ந்திர ஜடேஜாவிற்க்கும் , ஸ்கேம் 1992 புகைப்படத்தினை அஸ்வினிற்க்கும் தேர்வு செய்துள்ளார் .

வசிம் ஜாபர் தேர்வு செய்துள்ள இந்திய அணியின் ப்ளேயிங் லெவன்:

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், சேட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி (கேப்டன்), அஜிங்கிய ரஹானே, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர் ), ரவீந்திர ஜடேஜா, ரவி அஷ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.