புவனேஷ்வர் குமார் இல்லை – 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறும் 5 வேகப்பந்து வீச்சாளர்களை கணித்துள்ள வாசிம் ஜாபர்

0
3654
Wasim Jaffer and Bhuvaneshwar Kumar

2022ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியா ஆடுகளம் என்றாலே வேகப்பந்து வீச்சாளர்கள் தான். பச்சை நிற புல் சூழ்ந்த அவர்களது பிட்ச்சில் பந்து வேகமாகச் சறுக்கி பேட்ஸ்மனை நோக்கிச் செல்லும். இது வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் பயனடைவார்கள். அணிக் கேப்டன்களும் தங்களது பிளேயிங் லெவனில் ஆல்ரவுண்டர்கள் தவிர 3 வேகப்பந்து வீச்சாளர்களை சேர்த்துக் கொள்வர்.

வாசிம் ஜாபர் தேர்ந்தெடுத்துள்ள 5 வேகப்பந்து வீச்சாளர்கள்

முன்னாள் இந்திய நட்சத்திரம் வாசிம் ஜாபர், 2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவுள்ள வேகப்பந்து வீச்சாளர்களை கணித்துள்ளார். ஜாபர் 6 வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாட வேண்டுமென விரும்புகிறார். முதல் பவுலராக, ஜஸ்பிரித் பும்ராவை தேர்வு செய்துள்ளார். இவர் தான் அணியின் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்வார். நடப்பு இந்திய அணியின் பெரிய தூணாக இவர் செயல்படுகிறார்.

- Advertisement -

இரண்டாவதாக, சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி பர்ப்பில் கேப் வென்ற ஹர்ஷல் பட்டேலை குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய ஸ்லோவர் பந்தை வைத்து பல பெரிய பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பியுள்ளார். இந்திய அணியில் கால் பதித்தப் பின்பும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

மூன்றாவது வீரர், சி.எஸ்.கே அணியின் முக்கிய பவுலரான தீபக் சாஹர். பவர்பிளேவில் சுலபமாக முக்கிய விக்கெட்டுகளை அள்ளும் திறன் கொண்டவர். இருப்பினும், டி20 உலகக் கோப்பை அணியில் தீபக் சாஹரின் இடத்தை தீர்மானிப்பது அவரது காயம் தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

நான்காவது வீரர், தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குள் நுழைந்து அங்கும் தன்னை நிரூபித்து சரியான பாதையில் சென்று கொண்டிருந்தார். காயங்கள் அவரை இந்திய அணியில் இருந்து வெளியேறச் செய்தது. தற்போது மீண்டும் காயத்தில் இருந்து மீண்டு வந்து அதிரடி காட்டி வருகிறார். 2022 ஐபிஎல் தொடரில் தன் அபார பந்துவீச்சை வெளிக்காட்டி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

சென்ற ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இவரைப் போன்ற ஓர் வீரரை மிஸ் செய்ததாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறினார். ஆனால் இந்த ஆண்டு எந்த வித தடங்களும் இல்லாமல் இந்திய அணிக்காக வெற்றிகரமாக செயல்படுவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர் ஆஸ்திரேலியா மைதானங்களில் சிறப்பான பந்துவீச்சை காட்டியுள்ளார்.

ஜாபர் கடைசியாக தேர்ந்தெடுத்துள்ள வீரர், மொஹம்மத் ஷமி. சமீப காலங்களாக இவரது ஃபார்ம் அபாரமாக உள்ளது . இவரது வேகமும் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்குத் தேவை. மாற்று வீரர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா அணியில் இடம்பெறுவது நல்லது என்று வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

வாசிம் ஜாபர் பட்டியலில் புவனேஷ்வர் குமார் மற்றும் தாக்கூர் இல்லை

இந்திய அணியின் ஸ்விங் கிங் எனப்படும் புவனேஷ்வர் குமாரை முதன்மையாக தேர்ந்தெடுக்காமல் மாற்று வீரர்கள் பட்டியலில் சேர்த்திருப்பது சற்று ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக ரசிகர்கள் கருதுகின்றனர். புதிய பந்தில் புவனேஷ்வர் குமார். பணி இந்திய அணிக்கு கட்டாயம் அவசியம். மேலும், சென்ற ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற ஷார்துல் தாக்கூரின் பெயர் வாசிம் ஜாபர் பகிர்ந்துள்ள பட்டியலில் இல்லை.

- Advertisement -