விராட் கோலி கிடையாது ! சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இவரால் மட்டும் தான் முறியடிக்க முடியும் – வாசிம் ஜாபர் நம்பிக்கை

0
328
Sachin Tendulkar and Wasim Jaffer

கிரிக்கெட் உலகின் கடவுளான சச்சின் டெண்டுல்கர் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். சச்சின் என்றாலே 100 சதங்கள் தான் அனைவர் நினைவுக்கும் வரும். இதை முறியடிக்க விராட் கோலி ஒருவரால் மட்டுமே முடியும் என அனைவரும் நம்பினர். ஆனால் போகிறப் போக்கைப் பார்த்தால் அது நிச்சயம் முடியாது என்பது தான் மறுக்கப்பட முடியாத உண்மை. இதுவரை 70 சதங்கள் சேர்த்துள்ள கோலி, தன் 71வது சதத்தை அடிக்க 2 வருடங்களுக்கு மேல் முயற்சிக்கிறார். ஆனால் இன்னும் அதை எட்டிய பாடில்லை.

சச்சின் டெண்டுல்கர், 200 டெஸ்ட் போட்டிகளில் 53.8 சராசரியில் 15921 ரன்கள் சேர்த்துள்ளார். வாசிம் ஜாபர் அவர்கள், சச்சினின் இந்தச் சாதனையை முறியடிக்க ஒருவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது. அவர் குறிப்பிட்டுள்ள வீரர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோ ரூட் தான். “ அவருக்கு 31 வயதுதான் ஆகிறது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் வாழ்க்கை நீண்டதாக இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இன்னும் 5-6 ஆண்டுகள் விளையாடினால், அவர் சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும் என்று நினைக்கிறேன் ” என்றார் ஜாபர்.

- Advertisement -

50 ரன்களைச் சேர்த்தப் பின் அதை சதகமாக மாற்ற முடியாமல் பலரது கேலிப் பேச்சை சம்பாதித்தார். ஒரு கட்டத்தில் அவரே தன்னை ஃபேப் 4 வீரர்களில் சேர்க்க வேண்டாம் என்றெல்லாம் கூறினார். ஆனால் தற்போது அவர் தான் அந்த ஃபேப் 4 வீரர்களில் முதன்மையாக உள்ளார். எட்ஜ்பஸ்டனில் நடந்த கடைசி டெஸ்ட்டில் சதம் விளாசி விராட் கோலியின் ரெக்கார்டை உடைத்தார். கடந்த 2 ஆண்டுகளாக ஜோ ரூட் அபார ஃபார்மில் விளையாடி வருகிறார்.

தற்போது டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உயர்ந்து நிற்கும் ரூட், இதே வேகத்தில் சென்றால் வாசிம் ஜாபர் சொன்னது போல் நிச்சயம் சச்சினின் டெஸ்ட் சாதனையை முறியடித்து விடுவார். 121 டெஸ்ட் போட்டிகளில் 10458 ரன்கள் அடித்துள்ளார். அவரது சராசரி 50.8 ஆகும். சச்சின் டெண்டுல்கரைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு செல்ல, ஜோ ரூட்டுக்கு இன்னும் 5493 ரன்கள் மட்டுமே தேவை.