வாஷிங்டன் சுந்தர் ஜிம்பாப்வே தொடரிலிருந்து திடீர் நீக்கம்; இது தான் காரணம் – பிசிசிஐ தகவல்!

0
116

தோள்பட்டையில் திடீரென காயம் ஏற்பட்டுள்ளதால் ஜிம்பாப்வே தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகி உள்ளார்.

ஆசிய கோப்பை தொடர் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு முன்பாக ஜிம்பாவே அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

- Advertisement -

காயம் காரணமாக வெளியில் இருந்த கேஎல் ராகுல் மீண்டும் இந்திய அணிக்குள் வந்திருக்கிறார். இந்த தொடரில் கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அணியில் வாஷிங்டன் சுந்தர், ராகுல் திரிப்பாத்தி, குல்தீப் யாதவ், தீபக் சாகர், இசான் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து சென்று கவுன்டி தொடரில் விளையாடி வந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 50 ஓவர்கள் போட்டியில் விளையாடய போது பீல்ட்டிங் செய்கையில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். காயம் சற்று தீவிரமாக இருப்பதால் உடனடியாக இந்தியா திரும்பி இந்திய தேசிய அகடமையில் சிகிச்சையும் மேற்கொள்ள உள்ளார் என தகவல்கள் வந்தன.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜிம்பாப்வே தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் நிச்சயம் நீக்கப்படுவார். ஓல்ட் டிரபோடு மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருககிறது. இந்தியா அழைத்து வரப்பட்டு பெங்களூருவில் உள்ள பி சி சி ஐ அகடமியில் சிகிச்சை மேற்கொள்ள ஆட்படுத்தப்படுவார். பீல்டிங் செய்து கொண்டிருக்கும்பொழுது தவறுதலாக விழுந்து இத்தகைய காயம் ஏற்பட்டிருக்கிறது என எங்களுக்கு தகவல்கள் வந்திருக்கிறது. அவர் இந்தியா வந்த பின்பு முழுமையாக பரிசோதிக்கப்பட்டு அப்போது எந்த நிலையில் இருக்கிறார், எந்த மாதிரியான சிகிச்சைகள் கொடுக்கப்படும் என பிசிசிஐக்கு அறிவிப்புகள் கொடுக்கப்படும்.” எனவும் இந்திய தேசிய அகடமையில் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“நல்ல திறமையான இளம் ஆல்ரவுண்டர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய அணிக்கு ஆடுவதற்கு முன்பு இப்படி நேர்ந்திருக்கிறது. அவருக்கு சிறிது அதிஷ்டமும் தேவை. எனவும் அவர் குறிப்பிட்டார்.

- Advertisement -