வாஷிங்டன் சுந்தர் ரூல்டு அவுட்.. மாற்று வீரராக ஆச்சரியப்படுத்தும் பெயர் அறிவிப்பு.. இவருக்கு எப்படி வாய்ப்பு கொடுத்தார்கள்?

0
632
Sundar

நியூசிலாந்து அணிக்கு எதிராக எஞ்சி இருக்கும் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் இருந்து வாஷிங்டன் சுந்தர் காயத்தால் விலகி இருக்கிறார்.

நேற்றைய போட்டியில் ஐந்து ஓவர்கள் பந்து வீசி இருந்த அவர் இடதுபுற விலா எலும்பில் கடுமையான வலியை உணர்ந்ததால் மேற்கொண்டு பந்து வீசவில்லை. இந்த நிலையில் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த அவரால் ரன் ஓடவும் முடியவில்லை.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர் ரூல்டு அவுட்

இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எங்கு இருக்கும் 2 போட்டிகளில் இருந்தும் வெளியேறி இருக்கிறார். அவர் மூன்று வடிவ இந்திய அணிகளிலும் விளையாடுகின்ற காரணத்தினால் அவருடைய காயம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மேலும் வாஷிங்டன் சுந்தர் t20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்று இருந்தார். இதன் காரணமாக அவருடைய காயம் தற்போது இந்திய அணி நிர்வாகத்திற்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது. காரணம், ஏற்கனவே திலக் வருமா காயத்தின் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

ஆச்சரியப்படுத்தும் மாற்று வீரர்

தற்போது வாஷிங்டன் சுந்தர் ஆப் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டராக இந்திய அணிகளில் இடம் பெற்று வருகிறார். அவர் விளையாட முடியாவிட்டால் அவருடைய இடத்திற்கு ஆஃப் ஸ்பின் பேட்டிங் ஆல் ரவுண்டர் ரியான் பராக் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே இந்திய அணி நிர்வாகத்தின் திட்டங்களில் அவர் இருந்து வந்தார்.

இதையும் படிங்க : நான் பவுலர் இல்ல ஆல் ரவுண்டர்.. இந்த ரகசிய வேலைகள் நடக்குது.. 7வது இடம் எனக்குதான் – ஹர்ஷித் ராணா பேட்டி

இந்த நிலையில் டெல்லி மாநில அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காகவும் விளையாடும் இளம் வீரர் ஆயுஸ் பதோனி வாஷிங்டன் சுந்தர் இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவரும் ஆப் ஸ்பின் பகுதி நேரமாக பேசக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரியான் பராக்கை தேர்வு செய்யாமல் இவரை தேர்வு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -