நான் ஏன் என்னுடைய விக்கெட்டை தியாகம் செய்தேன்? – ரன் அவுட் விவகாரத்தை பற்றி பேசிய வாஷிங்டன் சுந்தர்!

0
15757

சூரியகுமாருக்கு பதிலாக, என்னுடைய விக்கெட்டை நான் ஏன் தியாகம் செய்தேன் என பேசியுள்ளார் வாஷிங்டன் சுந்தர்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.

- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு இந்த முடிவு சாதகமாக அமையவில்லை. பவர்-பிளே ஓவர்களில் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. சீரான இடைவெளிகளில் வீக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.

நூறு ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணியாலும் எளிதாக எட்டமுடியவில்லை. நியூசிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர்.

50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தபின், உள்ளே வந்த வாஷிங்டன் சுந்தர் சூரியகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களை குவித்து வந்தார்.

- Advertisement -

அப்போது இவர்கள் நடுவே இருந்த சில குழப்பதினால் ரன் அவுட் நேர்ந்தது. அப்போது சூரியகுமார் யாதவிற்காக வாஷிங்டன் சுந்தர் தனது விக்கெட்டை தியாகம் செய்து வெளியேறினார்.

அதன்பின் உள்ளே வந்த ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 15 ரன்களும், சூரியகுமார் 31 பந்துகளில் 26 ரன்களும் அடித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு உதவினர்.

19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்களை அடித்த இந்திய அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இரண்டாவது டி20 போட்டியை வென்றது. 1-1 என தொடரையும் சமன் செய்தது.

போட்டி முடிந்தபின் பேசிய வாஷிங்டன் சுந்தர், ஆட்டத்தின் நடுவே நடந்த ரன் அவுட் குழப்பம் மற்றும் விக்கெட்டை தியாகம் செய்தது குறித்து பேசினார். வாஷிங்டன் சுந்தர் பேசியதாவது:

” என்னை விட சூரியகுமார் யாதவ் கடைசி வரை நின்று விளையாடினால் இந்திய அணிக்கு சிறந்தது என்று நினைத்தேன். குறைந்த இலக்கை சேஸ் செய்யும் பொழுது, ஒன்று இரண்டு ரன்களை அதிகமாக எடுக்க முயற்சிப்போம். அப்போது இது போன்ற குழப்பங்கள் வருவது இயல்பான ஒன்று . மேலும் மிடில் ஓவர்கள் சிக்கலானது, அப்போது வீரர்கள் மத்தியில் சிலநேரம் புரிதல்கள் தவறாக செல்லும். சரி செய்துகொள்ளலாம்.” என்றார்.