நான் இந்த பவுலர்களோட கம்பர்ட்டபிளாதான் இருந்தேன் – தோல்விக்குப் பின் தோனி பேச்சு!

0
337
MSD

பிசிசிஐ நடத்தும் டி20 லீக் ஐபிஎல் தொடர் இன்று தனது 16ஆவது சீசனில் அடி எடுத்து வைத்தது. பதினாறாவது சீசனின் முதல் போட்டியில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதிக்கொண்டன!

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச குஜராத் அணி முடிவு செய்ய, சென்னை அணிக்கு அந்த அணியின் இளம் வீரர் ருதுராஜ் மிகப் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ருத்ராஜ் குஜராத் அணியின் பந்துவீச்சை கண்டு எந்த ஒரு இடத்திலும் அச்சமடையவில்லை, பந்துகளை தரையோடுதான் அடிக்க வேண்டும் என்று நினைக்கவும் இல்லை.

ருதுராஜ் 50 பந்துகளில் 92 ரன்கள் குவித்தாலும் மற்ற யாரும் சரியாக விளையாடாத காரணத்தால் 200 ரன்களை எட்ட வேண்டிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு ஏழு விக்கட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதை எடுத்து விளையாடிய குஜராத் அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரும் இளம் இந்திய வீரருமான சுப்மன் கில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

பின்பு விளையாடிய குஜராத் அணி 19 புள்ளி இரண்டு ஓவரில் இலக்கை எட்டி தனது முதல் வெற்றியை தனது முதல் ஆட்டத்தில் பதிவு செய்து கொண்டது. இந்த ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியின் அணி தேர்வு பற்றிய கொஞ்சம் சலசலப்பு சமூக வலைதளங்களில் இருக்கிறது.

இந்த நிலையில் தோல்விக்கு பின் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ” பனி இருக்கும் என்று நாம் அனைவரும் அறிந்ததே. நாங்கள் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். ருத்ராஜ் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவரது பேட்டிங் டைமிங் மிக அருமையாக இருந்தது. அவரது பேட்டிங்கை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. இளைஞர்கள் அடுத்து அடி எடுத்து வைப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்!” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய மகேந்திர சிங் தோனி ” பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பாக வருவார்கள் என்று நம்பலாம். ஆனால் ஒரு விஷயம் நோபால் என்பது பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. எனவே அவர்கள் இந்த விஷயத்தில் தங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஹங்கர்கேக்கர் நல்ல வேகம் இருக்கிறது அவர் நல்ல பந்துவீச்சாளராக வருவார். இரண்டு இடது கை வீரர்கள் வேண்டுமென்று நினைத்தேன். சிவம் துபே தேர்வாக இருந்தது. மற்றபடி நான் ஒட்டுமொத்தமாக பந்துவீச்சாளர்களுடன் வசதியாகவே இருந்தேன்!” என்று தெரிவித்திருக்கிறார்.