தல தோனி ஸ்டைலில் ரன் அவுட் முயற்சி செய்த இலங்கை வீரர் ஹசரங்கா

0
653
Wanindu Hasaranga Run Out

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 27 ஆம் தேதி நடைபெறவிருந்த இப் போட்டியில் இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதனால் போட்டி 28ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. இதனால் பாண்டியா உடன் நெருக்கமாக இருந்த வீரர்கள் அனைவரையும் தனிமையே வைக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்திய அணி 4 புதுமுக வீரர்கள் (தேவ்தத் படிக்கல் , நித்தீஸ் ரானா , ருத்ராஜ் கெய்குவாட் ,சேட்டன் சக்காரியா) வைத்து 2வது டி20 போட்டியில் விளையாடத் தொடங்கியது.

இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. லெப்ட் அண்ட் ரைட் காம்பினேஷனில் தொடக்க வீரராக ருத்ராஜ் கெய்குவாடுடன் ஷிகர் தவான் களமிறங்கினர் . இந்தியாவின் பேட்டிங் நேற்றைய போட்டியில் மிகவும் சுமாராக இருந்தது குறிப்பாக டாப் ஆர்டர் வரிசையில் களமிறங்கிய வீரர்கள் சரியாக செயல்படாததால் பின் வரிசையில் வரும் வீரர்கள் தடுமாறினர்கள். இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவன் 40 ரன்களிலும் தேவ்தத் படிக்கல் 29 ரன்கள் அடித்து இருந்தார்கள்.

- Advertisement -

தல தோனி ஸ்டைலில் ரன் அவுட் முயற்சி

Dhoni Run Out

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 130 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது.இப்போட்டியில் 19 வது ஓவரை வீசுவதற்க்காக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் ஹசர்ஙகா பந்தை வீச அதை எதிர்கொண்ட இந்திய அணியின் துணை கேப்டன் புவனேஸ்வர் குமார் லாங் ஆன் திசையில் அடித்தார். பந்தை தடுத்த பீல்டர் பந்தை ஹசரங்கா விட தூக்கி எறிய ஹசரங்க பந்தை பிடித்து தனக்கு பின்னால் இருக்கும் ஸ்டம்பில் பார்க்காமல் அழகாக அடித்தார். ரன் அவுட் ஆக இருக்குமோ என்று எண்ணிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது . ஹசரங்காவின் இச்செயல் தோனியை போல உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

பின்னர் களமிறங்கிய இலங்கை அணி இறுதிவரை போராடி போட்டியில் வென்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தனஞ்ஜெயா 40 ரன்களிலும் கருணரத்ன 13 ரன்களிலும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இலங்கை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்கள் . இதனிடையே டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது . இதன் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதினால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.