இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் முடித்த பின்னர், நவம்பர் 8ஆம் தேதி முதல் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டி20 தொடருக்கான பயிற்சியாளராக கௌதம் கம்பீர் இருக்கும்போது விவிஎஸ் லக்ஷ்மன் பொறுப்பேற்று இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா தென்னாபிரிக்கா டி20 கிரிக்கெட் தொடர்
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்திருக்கும் நிலையில் அடுத்ததாக மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வருகிற நவம்பர் 1ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதற்குப் பிறகு சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில் இந்திய அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது டி20 தொடருக்கான பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கிறார். இவர் ஏற்கனவே கௌதம் கம்பீர் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இடைநிலை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமனம்
இந்த சூழ்நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட இருப்பதால் வருகிற 10-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட தயாராகி இருக்கிறது. அதில் இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வீரர்களோடு பயணம் செய்ய உள்ளார் என்ற தகவலும் தற்போது வெளிவந்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22ஆம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:செலக்ட் ஆயிட்டேன்.. நானே ஆஸி பிளேயர் மாதிரிதான்.. இவர்தான் எல்லாத்துக்கும் காரணம் – ஹர்ஷித் ராணா பேட்டி
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டி 8,10, 13,15ம் தேதிகளில் நடைபெற உள்ளது. எனவே இந்த டி20 அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் தலைமையில் சாய்ராஜ் பஹுதுலே, ஹ்ரிஷிகேஷ் கனிட்கர் மற்றும் சுபதீப் கோஷ் ஆகியோர் கொண்ட அணியும் செயல்பட உள்ளது. இவர்கள் மூவர் ஏற்கனவே ஓமனில் நடைபெற்ற எமர்ஜிங் கோப்பையில் பயிற்சியாளர்களாக பணியாற்றி இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி கடந்த இரண்டு முறையும் பார்டர் கவாஸ்கர் டிராபி கோப்பையை கைப்பற்றி இருப்பதால் மூன்றாவது முறையும் கைப்பற்றும் என ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.