அவருக்கு ‘குட் பை’ சொல்லி வழி அனுப்பி விடுங்க.. அவரோட சேவை இனி கொல்கத்தா அணிக்கு போதும் – வீரேந்திர சேவாக் அதிரடி

0
366

நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தனது இறுதி போட்டியை நிறைவு செய்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக் கொல்கத்தா அணி வீரர் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ராகுல் 30 பந்துகளில் 60 ரன்கள் குவித்து அசத்தினார். கொல்கத்தா அணியில் சௌரப் தூபே 2 விக்கெட் கைப்பற்றினார். அதற்குப் பிறகு பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தார்கள்.

அதில் கேப்டன் ரகானே மட்டும் அதிகபட்சமாக 39 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் குறிப்பிட்ட ரன் ரேட் வரிசையில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடலாம் என்று இருந்த நிலையில் 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்ததால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் தொடக்கத்தில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல தோல்விகளை சந்தித்த கேகேஆர் அதற்குப் பிறகு சிறப்பான காம்பினேஷனை அமைத்து தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று வந்தார்கள். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கேப்டன் ஆக இருந்தது வீரேந்திர சேவாக் ரகானே அடுத்த ஐபிஎல் தொடரில் ஒரு சாதாரண வீரராக வேண்டுமென்றால் விளையாடட்டும் இல்லையென்றால் அவருக்கு இந்த தொடரோடு வழி அனுப்பி விட வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது “என் கருத்துப்படி, கொல்கத்தா அணி இனி வேற கேப்டனை தேட வேண்டும் அல்லது அணியின் கட்டமைப்பின் சிறப்பாக மாற்றி அமைக்க வேண்டும். அந்த அணியில் அஜிங்கிய ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் மணீஷ் பாண்டே போன்ற குறைந்த ஸ்டிரைக் ரேட் கொண்ட வீரர்கள் விளையாடுகிறார்கள். எனவே இந்த மூவரையும் ஒரே நேரத்தில் விளையாடச் செய்வது அணிக்கு சிக்கலாகிவிடும். எனவே ஒரு புதிய கேப்டனை நியமித்துவிட்டு ரகவானை ஒரு சாதாரண வீரராக விளையாட வைக்க வேண்டும் இல்லையென்றால் உங்களுக்கு மிக்க நன்றி இத்துடன் உங்கள் பயணம் நிறைவடைகிறது என்று கூறி விட வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -