அடுத்த மாதம் துவங்க இருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்கு போட்டியை மாற்றக்கூடியவர்களாக எந்த இந்திய வீரர்கள் இருப்பார்கள் என்பது குறித்து வீரேந்தர் சேவாக் தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார்.
அடுத்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் 8 ஆசிய நாடுகளை கொண்டு யுனைடெட் அரபு எமிரேட்டில் ஆசிய கோப்பைத் தொடர் டி20 வடிவத்தில் நடைபெற இருக்கிறது. தற்போது இந்திய அணி நடப்பு ஆசிய சாம்பியனாகவும் டி20 உலக சாம்பியனாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பலங்கள்
தற்போது இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் இடம் பெறக்கூடிய அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பவுலிங் யூனிட்டில் இடம் பெறக்கூடிய பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் தனி ஒரு வீரராக போட்டியை வென்று கொடுக்க முடிந்தவர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது துவக்க ஆட்டக்காரராக துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கும் கில் இடம் பெறுவார் என்பது ஏறக்குறைய உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் துவக்க ஆட்டக்காரராக இடம் பெறுவது கடினம் ஆகிறது. அவரை மிடில் வரிசையில் விளையாட வைப்பதும் கடினம் என்றே தெரிகிறது.
இந்த மூன்று பேர் கேம் சேஞ்சர்கள்
இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும் பொழுது ” அபிஷேக் ஷர்மா ஆட்டத்தையே மாற்றக்கூடியவராக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். பும்ரா எப்பொழுதும் ஆட்டத்தை மாற்ற கூடியவர். மேலும் வரும் சக்கரவர்த்தி தனது மர்ம சுழல் பந்து வீச்சால் போட்டியை மாற்றுவதை சாம்பியன் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் பார்த்தோம். எனவே ஆசிய கோப்பையில் இந்த மூன்று வீரர்களும் இந்திய அணிக்கு கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள். இவர்களால் தனியாக போட்டியை வெல்ல முடியும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : அடுத்த பயிற்சியாளராக வருகிறாரா புஜாரா? பிசிசிஐயிடம் வெளிப்படையாக பேசிய புஜாரா.. முழு விவரம்
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கே), ஷுப்மன் கில் (துகே), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விகீ), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா மற்றும் ரிங்கு சிங்.
காத்திருப்பு வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரல்






